கதக்: சுஷில் குமார்
சுஷில் குமாரின் கதைகளை நான் இங்கே முன்பு இரண்டொரு முறை பகிர்ந்திருக்கிறேன். இன்றும் அவரது ஒரு அற்புதமான கதையைப் படித்தேன். மிகவும் என் மனதைக் கவர்ந்தது.
சுஷில் குமாரின் கதைகளை நான் இங்கே முன்பு இரண்டொரு முறை பகிர்ந்திருக்கிறேன். இன்றும் அவரது ஒரு அற்புதமான கதையைப் படித்தேன். மிகவும் என் மனதைக் கவர்ந்தது.
தமிழ் எழுத்தாளர்களின் அவல நிலை பற்றி தமிழ்நாட்டு முதல்வருக்கு நான் இரண்டு கடிதங்கள் எழுதி அதை அவரும் கவனத்தில் கொண்டு அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அப்போதே அபிலாஷ், வீடு கொடுத்தால் அதை வாங்கி எழுத்தாளர்கள் ஏழைகளிடம் கொடுத்து விட வேண்டும் என்று எழுதியிருந்தார். கிட்டத்தட்ட அப்படித்தான் எழுதியிருந்ததாக ஞாபகம். இன்றைய ஒரு கட்டுரையிலும் கிட்டத்தட்ட எழுத்தாளர்கள் அத்தனை பேரையும் castrate பண்ணுகிற மாதிரியான கருத்துகள். அதில் அவர் சொல்வதன் சாரம்: ஜெனே போல் … Read more
Autofiction என்ற இலக்கிய வகையில் உலக அளவிலேயே ஒன்றிரண்டு பேர்தான் எழுதுகிறார்கள். இந்த நாவலில் அதனை வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறார் சாரு. நடையும் விவரணங்களும் baroque பாணியில் அமைந்திருக்கின்றன. ஆடம்பரமும் நுணுக்கமான கலை வேலைப்பாடுகளும் படாடோபமும் கலந்தது பரோக் பாணி கட்டிடக் கலை. உதாரணமாக, கைலாச மலையின் வடக்கே உள்ள மைநாக மலைக்கு அருகே பிந்து நதியின் கரையிலிருந்து ரத்தினங்களையும் தங்கத்தையும் எடுத்து வந்து பாண்டவர்களுக்காக மயன் கட்டிய மாளிகையைச் சொல்லலாம். இந்த நாவலின் கட்டமைப்பும் விவரணங்களும் பிரம்மாண்டமும் … Read more
Thanks, Shruti TV
நேற்று நடந்த க்ளப்ஹவ்ஸ் சந்திப்பு பிரமாதமாக இருந்தது. ஆறரைக்குத் தொடங்கி ஒன்பதரைக்குப் பிரிய மனமில்லாமல் பிரிந்தோம். இன்னும் மூன்று மணி நேரம் கூடப் போயிருக்கும். இனிமேல், மாதம் ஒருமுறை இப்படி வாசகர்களையும் நண்பர்களையும் சந்திக்கலாம் என்று இருக்கிறேன். அடுத்த சந்திப்பு குறித்த நாள் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். மொத்தம் 370 பேர் கலந்து கொண்டார்கள். ஒரு கட்டத்தில் அது 320 ஆனது. அதற்குக் கீழே குறையவில்லை. கேரளத்தில் டி.சி. புக்ஸ் சந்திப்பில் 1000 பேர் கலந்து கொள்கிறார்கள். … Read more