Pithy thoughts – 12

ஒரு கள ஆய்வுக்காகக் கண்ணம்மாப்பேட்டை சுடுகாட்டுக்குச் சென்றிருந்தபோது பாதியெரிந்த பிரேதத்தைப் புசித்துக் கொண்டிருந்த மனித சாயலிலிருந்த ஒரு உருவத்தைப் பார்த்து நீ கடவுளா மனிதனா எனக் கேட்டேன் சைத்தான் என்றது உருவம் எந்த ஊர் என்றால் அந்தரவாசி என்றது அதோடு விடாமல் என்னோடு கூடவே வந்தது வாயெல்லாம் வழிந்த குருதியைக் கழுவிக் கொள் எனச் சொல்லி என் பையிலிருந்த வாட்டர் பாட்டிலைக் கொடுத்தேன் சுத்தப்படுத்திக் கொண்ட சைத்தான் என்ன வரம் வேண்டும் கேள் என்றது ஆகா உன்னைத்தான் … Read more

Pithy thoughts – 11

நிலம் தீ நீர் வளி விசும்பென ஐந்தும் கலந்ததால் உலகம் தன் சகாக்களிடமிருந்து பிரிந்து தனிமைப்படலாயிற்று உலகவாசியான மனிதனும் தனிமை கொண்டான் தனிமை வாட்டியதால் அந்தரவாசியாய்க் கடவுளைப் படைத்தான் பசியெடுத்த கடவுளுக்குத் தன்னையே தின்னவும் கொடுத்தான் உண்டு கொழுத்த கடவுள் செய்வதற்கேதுமில்லையென இனப்பெருக்கம் செய்ய பலிகள் பெருகின சமயங்களில் கடவுளே பலியான கதைகளும் நடந்தன பசி கொண்ட சிங்கமொன்று சின்னஞ்சிறு மான்குட்டியை வாஞ்சையுடன் நக்கிக் கொடுத்தது *** மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில … Read more

169. விருக்‌ஷனின் மொழிபெயர்ப்பில் இந்தோனேஷியக் கவிஞர் சபார்டி ஜோகோ தமோனோவின் கவிதைகள்

எனக்கு ஆசிய நாடுகளின் – அதிலும் குறிப்பாக தென்கிழக்கு ஆசிய எழுத்தாளர்கள் யாரையுமே தெரியாது.  இந்தோனேஷியாவில் Garin Nugroho என்ற இயக்குனர் பற்றி மட்டுமே தெரியும்.  அவரது The Poet என்ற அற்புதமான படத்தைப் பற்றி பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதியிருக்கிறேன்.  இப்போது விருக்‌ஷனின் மொழிபெயர்ப்பில் வந்துள்ள இந்தோனேஷியக் கவிஞர் சபார்டி ஜோகோ தமோனோவின் (Sapardi Djoko Damono) கவிதைகளை வாசிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.  அற்புதமான கவிதைகள்.  மிகத் தேர்ந்த மொழிபெயர்ப்பு.  தமிழ் மொழிபெயர்ப்பு … Read more

சூரரைப் போற்று

சும்மா ஒரு ஜாலிக்காக சூரரைப் போற்று பார்க்க ஆரம்பித்தேன். மூணு நிமிடம் ஆகியிருக்கும். அந்த மூணு நிமிடத்திலேயே மரண கப்ஸா. அப்படியெல்லாம் விமானம் இறங்குவதற்கு மறுக்க மாட்டார்கள், உலகின் எந்த மூலையிலும். அடுத்து ரயில் காட்சி. எல்லோரும் அந்தக் காலத்து சபா நாடகம் மாதிரி ரெக்கார்டிங் தியேட்டரில் தொண்டை வரள கத்தியிருப்பார்கள் போல. காட்டுக் கத்தல் கத்துகிறார்கள். அடுத்து நடிகவேள் கருணாஸ் ஒரு பிராமணரைக் கேலி பண்ணுவது போல் பிராமண பாஷை பேச ஆரம்பித்ததும் குமட்டிக் கொண்டு … Read more

ஸ்மாஷன் தாரா – 3

ஆதி அந்தமில்லாத காலப்பெருவெளியின் இந்தவொரு புள்ளியில் நாம் சந்தித்தது சந்தர்ப்பவசமோ விதிவசமோ தெரியாது மனிதக் கணக்கில் இருபது ஆண்டுகள் ஒன்றாயிருந்தோம் சட்டென்று கரைந்து விட்டாய் காலத்தில் அநந்தகோடி ஒளிப்புள்ளிகளில் ஒன்றாகிவிட்ட உன்னையினி சந்திக்க இயலுமோ சந்தித்தாலும் ஞாபகமிருக்குமோ இந்த இருபது ஆண்டுகளில் நாம் பேசிய வார்த்தைகளும் பேசாத மௌனங்களும் கூடலும் ஆடலும் வெறுப்பின் வெம்மை படிந்த பகல்களும் மோகத்தீயில் பற்றியெரிந்த இரவுகளும் எனக்காக உன்னை உருக்கிக் கொண்டதும் தங்கக் கூண்டில் எனைச் சிறைப்படுத்திய உன் பிரியத்தின் கூர்முனைகளும் … Read more

ஸ்மாஷன் தாரா – 2

ஆசைப்பட்டது கிடைக்கவில்லை துக்கமான துக்கம் ஆசையை விடு துக்கம் போகுமென்றானொரு ஆசான் விட்டேன் துக்கம் அகன்றது அப்போது வந்தாள் ஸ்மாஷன் தாரா என்ன வரம் வேண்டும் கேள் மகனே என்றாள் ஒரு ஐந்து நிமிடம் முந்தி வந்திருக்கக் கூடாதா உலகத்தையே கேட்டிருப்பேன் என்றேன் இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை கேளென்றாள் எதுவும் வேண்டாம் முடிந்தால் என்னோடு இரு என்றேன் அதற்கென்ன இருந்தால் போயிற்று என்றாள் கவிதை பிறக்கலாயிற்று