Pithy thoughts – 12

ஒரு கள ஆய்வுக்காகக்

கண்ணம்மாப்பேட்டை சுடுகாட்டுக்குச்

சென்றிருந்தபோது

பாதியெரிந்த பிரேதத்தைப்

புசித்துக் கொண்டிருந்த

மனித சாயலிலிருந்த ஒரு

உருவத்தைப் பார்த்து

நீ கடவுளா மனிதனா

எனக் கேட்டேன்

சைத்தான்

என்றது உருவம்

எந்த ஊர் என்றால்

அந்தரவாசி என்றது

அதோடு விடாமல் என்னோடு

கூடவே வந்தது

வாயெல்லாம் வழிந்த குருதியைக்

கழுவிக் கொள் எனச் சொல்லி

என் பையிலிருந்த வாட்டர் பாட்டிலைக்

கொடுத்தேன்

சுத்தப்படுத்திக் கொண்ட சைத்தான்

என்ன வரம் வேண்டும்

கேள் என்றது

ஆகா உன்னைத்தான் தேடிக் கொண்டிருந்தேன்

என்ற நான்

ஓப்ரா வின்ஃப்ரே ஷோவில்

என் புத்தகம் வர வேண்டுமென்றேன்

கொடுத்தேன் வரம் என்ற சைத்தான்

அது யார் என்ன விவரமென்று கேட்டது

ஜான் க்ரே ஜான் க்ரே என்றொரு ஆள்

காலேஷ்வர் ஸ்வாமியிடம்

வாங்கினாரொரு வரம்

ஓப்ரா வின்ஃப்ரே ஷோவில்

தன் புத்தகம் வர வேண்டுமென்றார்

புத்தகமும் வந்தது

உலகப் புகழும் வந்தது

ஆர்வத்துடன் காத்திருந்தேன்

ஆனால் அந்த வாரத்தோடு

ஓப்ரா வின்ஃப்ரே தன் நிகழ்ச்சியை

முடித்துக் கொண்டார்

காலேஷ்வரிடமே போய் விடலாமென்று

பேணுகொண்டா கிளம்பினேன்

உலகத்தையே சொஸ்தப்படுத்திக்

கொண்டிருந்தவருக்குக் கிட்னி ஃபெய்லியராம்

பெங்களூரு ஹாஸ்பிடலில்

இருக்கிறார் ஸ்வாமி காலேஷ்வர்

வரம் வாங்காமல் போகக் கூடாதென

அங்கேயே காத்திருந்தேன்

மரண செய்திதான் வந்தது

கடுப்புடன் கண்ணம்மாப்பேட்டைக்குத்

திரும்பினேன்

ரெண்டு மூணு பேர்

பிணத்தை எரித்துக் கொண்டிருந்தார்கள்

பக்கத்தில் குவாட்டர் பாட்டில்கள்

திறந்து கிடந்தன…