ஒருவர் பிறந்ததிலிருந்தே கண்களைக் கட்டிக் கொண்டே இருக்கிறார். ஒருவர் எழுதப் படிக்க ஆரம்பித்ததிலிருந்தே இலக்கியப் பிரதி எதையுமே தொட்டதில்லை. ஒருவர் தன் வாழ்நாளில் ஒரு உலக சினிமாவைக் கூடப் பார்த்ததில்லை. தெரிந்ததெல்லாம் விஜய், அஜித், தனுஷ், சூர்யா. ஒருவர் பிறந்ததிலிருந்தே நல்ல இசையைக் கேட்டதில்லை. இவர்களுக்கெல்லாம் நீங்கள் காண்பதன் அற்புதங்களையும், இலக்கியத்தின், சினிமாவின், இசையின் சுவைகளையும் மேன்மைகளையும் எப்படிச் சொல்லிப் புரிய வைக்க முடியும்? விவேகானந்தரின் வாழ்வில் நடந்த விஷயத்தை உதாரணமாகச் சொல்லலாம். அவர் ஒரு அக்நாஸ்டிக். இயற்கைதான் கடவுள். கிட்டத்தட்ட நாஸ்திகர்தான். மேற்கத்திய கல்வி கற்றவர். குத்துச்சண்டை வீரர். ஒரு ஹெடோனிஸ்ட். பணக்காரர் வேறு. கேட்க வேண்டுமா? இந்தக் காலகட்டத்தில் ஒருமுறை சந்தர்ப்பவசமாக ராமகிருஷ்ணரைச் சந்திக்க நேர்கிறது. அந்தச் சமயத்தில் அவர் எல்லா சாமியார்களிடமும் கேட்பது போல் கடவுளைக் காண முடியுமா என்று கேட்கிறார். ஓ தாரளமாக என்கிறார் ராமகிருஷ்ணர். அதெல்லாம் இல்லை, உங்களை நான் பார்ப்பது போல் தொட்டுப் பார்க்க வேண்டும். முடியுமா? ஓ, தாரளமாக. அதுவரை விவேகானந்தர் எத்தனையோ ஆன்மீகவாதிகளைப் பார்த்திருக்கிறார். இதே கேள்வியைக் கேட்டிருக்கிறார். யாருமே ராமகிருஷ்ணரைப் போல் பதில் சொன்னதில்லை. விவேகானந்தருக்கு அப்போதைக்கு அந்த பதிலே போதுமானதாக இருக்கிறது. இந்த மனிதரிடம் ஏதோ விஷயம் இருக்கிறது என்று நினைத்தபடி வந்து விடுகிறார்.
அந்தச் சமயத்தில் குடும்பத்தின் தலைவரான விவேகானந்தரின் மூத்த சகோதரர் எதிர்பாராத விதமாக இறந்து போக, கடனில் சொத்தெல்லாம் மூழ்கிப் போக குடும்பம் நடுத்தெருவுக்கு வந்து விட்டது. விவேகானந்தருக்கு பணக் கஷ்டத்தில் மூச்சு முட்டுகிறது. நேராக ராமகிருஷ்ணரிடம் வந்து உங்கள் காளியிடம் என் பணக் கஷ்டத்தை நீக்கச் சொல்லி வேண்டிக் கொள்ளுங்களேன் என்கிறார். நான் எதற்கு இடையில்? நீயே நேரில் பார்த்துக் கேளேன் என்கிறார் ராமகிருஷ்ணர். காளியின் முன்னே அமர்கிறார் விவேகானந்தர்.
நீண்ட நேரம் சென்று வெளியே வந்த விவேகானந்தரிடம் என்ன அன்னையைப் பார்த்தாயா, கேட்டாயா என்கிறார் ராம்கிருஷ்ணர். எனக்கு தீட்சை கொடுங்கள் என்கிறார் விவேகானந்தர். காளியை தர்சித்த அந்த முதல் சந்திப்பு பற்றி விவேகானந்தர் பிற்காலத்தில் விளக்கும்போது, ”உங்களைப் பார்ப்பதுபோல்தான் காளியைப் பார்த்தேன். அது எந்த உருவெளித் தோற்றமும் இல்லை. அப்போது எனக்கு லௌகீக விஷயங்கள் பற்றி எந்த ஞாபகமும் வரவில்லை” என்றார்.
விவேகானந்தார் உலகம் அறிந்தவர். இன்னொரு ஆனந்தா இருந்தார். நான் என்னை வெளிப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு இந்த மனிதர்களோ இந்த உலகமோ தயாராகவில்லை என்று சொல்லி பத்துப் பனிரண்டு நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே தன்னைக் காண்பித்துக் கொண்டவர். இப்போது அவர் இல்லை. தாந்த்ரீகத்தில் அவர் அடைந்த உயரங்களை அடைந்த மனிதர் யாரும் இல்லை. தாந்த்ரீகம் என்பது ஒரு சாதனம். அது சாதாரண மனிதர்களிடம் கிடைத்தால் பைத்தியத்திடம் கிடைத்த கத்தியைப் போல் ஆகி விடும். இதெல்லாம் ஆனந்தா சொன்னது. அவர் முதல் முதலாகத் தாந்த்ரீகப் பயிற்சியை முழுமையாக முடித்த அன்று காளி அவர் முன்னே தோன்றினாள். என்ன வேண்டும் கேள் மகனே? எனக்கு ஒன்றுமே வேண்டாம் அன்னையே. எடுத்த வாளை வெறுமனே உறையில் போட முடியாது. ஏதாவது கேள். சரி, நீ எப்போதுமே என் இதயத்தில் இருக்க வேண்டும். அந்தக் கணத்திலிருந்து ஆனந்தா நாம் காமிக்ஸில் பார்க்கும் சூப்பர்மேன் ஆகி விட்டார். யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. தம் அடிப்பார். செயின் ஸ்மோக்கர். பிரியாணி சாப்பிடுவார். பெஹன்சூத் மாதர்சோத் சொல்லுவார். ரேஸுக்குப் போவார். மற்றவர்களுக்கு அவர் ஒரு சாதாரண ஆள். அவரது அனுபவங்கள் மற்றவர்களைப் பொறுத்தவரை அர்த்தமில்லாதது.
சங்கீதமும் அப்படித்தான். அரியக்குடி ராமனுஜ அய்யங்காரையும், மகாராஜபுரம் விஸ்வநாத அய்யரையும், மதுரை மணி அய்யரையும், செம்பை வைத்தியநாத பாகவதரையும் கேட்காத செவிகள் செவிகளா என்று எனக்குத் தோன்றும். இவர்களைக் கேட்காமல் வாழ்ந்து என்ன பயன் என்று தோன்றும். இப்போது பாடுபவர்களை என்னால் கேட்கவே முடியவில்லை. காரணத்தை செம்மங்குடி சீனிவாச அய்யர் பிரமாதமாக விளக்குகிறார். இப்போது பாடுபவர்கள் குரலால் பாடுகிறார்கள். ஆன்மாவினால் பாடவில்லை. அது என்ன ஆன்மாவினால் பாடுவது? செம்மங்குடிக்கு ஆரம்பத்தில் அவ்வளவு பெரிய குரல் வளம் இல்லை. ஒரு வித்வான் இந்தப் பையனின் குரல் கொட்டாங்கச்சியைப் பாறையில் தேய்ப்பது போல் இருக்கிறது, வயலின் வாசிக்கச் சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அதைக் கேட்டு நொந்து போன செம்மங்குடி தினமும் ஆறு மணி நேரம் சாதகம் பண்ணினாராம். இப்படி யாரும் பண்ணவே கூடாது என்கிறார் செம்மங்குடி. தொண்டையே ரணகளமாகி அப்புறம் பேச்சு கூட வராமல் போய் விடும். ஆனால் மேதைகளின் விதிகளே தனி அல்லவா? கடவுள் கொடுக்காத குரலை சாதகத்தினால் கொண்டு வந்து விட்டார் செம்மங்குடி. ஆனாலும் அசுர சாதகத்தால் அவ்வப்போது குரல் மக்கர் பண்ணும். பொடி போடுங்கள், சரியாகும் என்று அறிவுரை சொன்னாராம் ராஜாஜி. பொடி போட ஆரம்பித்த பிறகுதான் அந்தக் குரல் பிரச்சினை சரியாயிற்று என்கிறார் செம்மங்குடி. ஆனாலும் பொடியைத் தொடர முடியவில்லையாம்.
ஈஸ்னோஃபீலியா, ஆஸ்துமா தொந்தரவுகள் வந்ததால் விட்டு விட்டேன், இருந்தாலும் அவ்வப்போது போடுவேன் என்கிறார். அப்படிப்பட்ட செம்மங்குடி சொல்கிறார், இந்தத் தலைமுறை கலைஞர்களிடம் ஆன்மானுபவம் இல்லை. அதை என்னால் நன்கு உணர முடிகிறது. அரியக்குடியிடம் மனம் லயிக்கிறது. ஆன்மா சிலிர்க்கிறது. பழைய ஆட்கள் அத்தனை பேருமே அப்படித்தான். இப்போதைய உலகப் புகழ் பெற்ற கலைஞர்கள் யாரிடமுமே அந்த அனுபவம் கிடைக்க மாட்டேன் என்கிறது.
மோக முள்ளில் ஒரு இடம்:
”பார்க்கிற்கு வெளியே, ஹோட்டல் வாசலில் மாட்டிய ஒலிபெருக்கியிலிருந்து இசை தவழ்ந்து வந்து கொண்டிருந்தது. வீணையின் இசை. ஏதோ தேர்ந்த விரலாகத்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பைரவி ராகத்தை இவ்வளவு சுத்தமாக எப்படி வாசிக்க முடியும்? அரை நிமிஷம் கேட்பதற்குள் பாபுவின் உள்ளமும் உயிரும் அதில் ஒன்றி விட்டன. அவ்வளவு சுருதி சுத்தமாக இசைந்தது அந்த கானம். கேட்ட மாத்திரத்திலேயே நெஞ்சையும் இதயத்தையும் தன் வசப்படுத்துகிற அனுபவம் நிறைந்த கானம். நிஷாதத்தை அசைத்து அசைத்து, மத்யமத்தைத் தொட்டுத் தொட்டுக் கோலமிட்ட அந்த வரிசை உள்ளத்தை உருக்கி, உடலைச் சிலிர்க்க அடித்தது. மநிதபதமா, நீதநீத நீத பதமாகரீ… ஆகா! வீணையை அப்படி வருடிய விரல்கள் எவ்வளவு புண்யம் செய்வதைகளோ! முதுகுத் தண்டிலிருந்து ஒரு சிலிர்ப்பு ஊர்ந்து அவன் உடல் உதறிற்று.
பாபுவின் கண்களில் தாரை தாரையாக நீர் பெருகிற்று. கண்ணை மூடிக்கொண்டு இசையின் தூய்மையான இனிமையில் திளைத்தான். கண்ணைத் திறக்கக் கூட மனம் இல்லை. வெளி உலகைப் பார்க்கக் கூட மனம் வராத கண்கள் திறக்க மறுத்தன. காலமும் இடமும் மறந்து அற்றுப் போன நிலையில், வெறும் ஒலி வடிவமான அனுபவத்தில் அவன் உள்ளம் ஆழ்ந்தது. ஒரு கணப்பொழுது உள்ளமும் ஒலியும் ஒன்றாகி விட்டன. ஆனால் அடுத்த விநாடி உள்ளம் ஒலியினின்றும் விண்டு தனியாகப் பிரிந்து, கேட்பவனாக, அனுபவிப்பவனாகத் தனியாக நின்றது.”
மேலே குறிப்பிட்ட அரியக்குடி போன்ற மேதைகளைக் கேட்கிற போது எனக்கும் இதே போன்ற அனுபவம்தான் ஏற்படுகிறது. கீழே சில இணைப்புகளைத் தருகிறேன்.
அரியக்குடி
தோடி ராகம், ஆதி தாளம்.
பாபநாசம் சிவனின் புகழ் பெற்ற கார்த்திகேய காங்கேய கௌரி பாடல்.
கார்த்திகேய காங்கேய கௌரி தனய
கருணாலய அருள் திருக்……. (கார்த்திகேய)
கீர்த்திமேய தென்பரங்குன்று திருச்
செந்தில் பழனி ஸ்வாமிமலை மேலும் வளர் (கார்த்திகேய)
குன்றுதோரும் அழகர் கோயில் தனிலும்
குஞ்சரியும் குறக்கொடியும் தழுவுதிண்
குன்றம் அனைய ஈராறு தோள்களோடு
குஞ்சரமென உலவும் சரவன்பவ (கார்த்திகேய)
மால்மருக ஷண்முக முருக குஹா
மகபதியும் விதியும் தொழும்
மாதங்க வதன ஸஹோதர அழகா
வேல் மருவும் அமல கரகமலா
குறுநகை தவழ் ஆறுமுகா
விரைவுகொள் மயூரபரி
மேல்வரு குமரா சூரனை ஸமருக்கொள் (கார்த்திகேய)
http://bit.ly/2ICq41I
http://bit.ly/2J639e3
http://bit.ly/2Fpo36T
இந்த சங்கீதத்தை அவ்வப்போது கேட்டு வந்தால் நம் செவிகளில் எப்போதுமே – உறங்கும்போது கூட – தாரை தாரையாய் சங்கீதம் பொழிந்தவண்ணமே இருக்கும். இதை நான் அனுபவத்திலிருந்து எழுதுகிறேன். தனியாகக் கேட்க வேண்டிய தேவை கூட இல்லை.
***
மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai