சாதத் ஹஸன் மண்ட்டோ

எக்ஸைல் மறு உருவாக்கம் தீவிரமாகப் போய்க் கொண்டிருக்கிறது.  ஏழாம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்பது திட்டம்.  அந்த வேலைக்க்குள் நுழைவதற்கு முன் வாசகர் வட்டத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக எட்டிப் பார்த்த போது இந்தச் சிறிய குறிப்பு கிடைத்தது.  நிஜந்தன் தோழன் எழுதியிருக்கிறார்.   சாதத் ஹஸன் மண்ட்டோவின் எழுத்தைப் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.  எனக்கு மிக நெருக்கமாக நான் உணரும் எழுத்தாளர்களில் மண்ட்டோவும் ஒருவர்.  தமிழில் மொழிபெயர்த்த ராமாநுஜம் மிகுந்த பாராட்டுக்கு … Read more

தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம்?

அராத்துவின் பையன் பெயர் ஆழிமழைக் கண்ணன்.  இப்படியெல்லாம் பெயர் வைக்காதீர்கள் என்று எவ்வளவோ மன்றாடினேன்.  அவர் கேட்கவில்லை.  தாஸ்தாயேவ்ஸ்கி, ப்யூகோவ்ஸ்கி, போர்ஹேஸ் என்றெல்லாம் வெளிநாட்டுக்காரன்கள் பெயர் வைக்கிறார்கள்.  அதை நம் ராமகிருஷ்ணன், போர்ஹே, தாஸ்தாவேஜ்ஸ்கி என்று உச்சரிக்கும் போதுஎவ்வளவு கோபப்படுகிறீர்கள்.  Jodorovsky என்ற பெயரை ஹொடரோவ்ஸ்கி என்றுதான் உச்சரிக்க வேண்டும் என்று எங்களையெல்லாம் எவ்வளவு டார்ச்சர் செய்தீர்கள்…  அதே போல் அவன்களும் என் மகன் பெயரை ஆழிமழைக் கண்ணன் என்று சொல்லட்டும் என்றார் அராத்து. அது சரி, … Read more

இமயம் – புகைப்படங்கள் – கணேஷ் அன்பு

இந்தப் புகைப்படங்களைப் பார்த்து அனுபவிக்கவும்.  ஒவ்வொரு புகைப்படத்தையும் க்ளிக் செய்தால் பெரிய அளவில் பார்க்கலாம். http://www.flickr.com/photos/101011245@N06/sets/72157635299944298/

ஒரு சிறிய பயணம்…

ராமநாதபுரத்தில் நண்பர் டிமிட்ரி திருமணத்தில் கலந்து கொள்ளச் செல்கிறேன்.  7-ஆம் தேதி மதியம் வைகை எக்ஸ்பிரஸில் நானும் அராத்துவும் கிளம்பி, 7-ஆம் தேதி இரவு மதுரையில் தங்குதல். டேய் மனோ, பூர்ணா,  மனாசே ராஜா இணைந்து கொள்வார்கள்.8-ஆம்தேதி மதிய உணவு முடித்து ராமநாதபுரம் பயணம். 8-ஆம் தேதி இரவு அங்கு தங்கி, 9-ஆம் தேதி திருமணம் முடிந்ததும் மதியம் கிளம்பி 9-ஆம் தேதி இரவும் மதுரையில் தங்குதல். 10-ஆம் தேதி காலை நானும் அராத்துவும் ஈரோடு செல்கிறோம்.  … Read more

வாசிப்பும் மிருக நிலையும் ஒரு சிறிய பிரார்த்தனையும்…

சாரு, உங்கள்சகஎழுத்தாளர்———————— நீங்கள்அ.மியைவிமர்சித்ததற்கு  உங்களைஅவர்கடுமையாகவிமர்சனம்செய்திருக்கிறார். நீங்கள்ஏன்அதற்குபதில்சொல்லவில்லை?. பிறகு, நீங்கள்எப்போதும்ஜெயமோகனைவிமர்சனம்செய்துஎழுதுகிறீர்கள். ஒருபத்திக்கூடஅவர்பெயரையைகுறிப்பிடாமல்உங்களால்எழுதமுடியவில்லை. ஆனால்அவரோஉங்களைகண்டுக்கொள்ளுவதேயில்லை. அவர்உயர்ந்துபோயிக்கொண்டேயிருக்கிறார். உங்கள்நோக்கம்என்ன?. அவரைதிட்டினால், உடனேஅவர்உங்களைதிட்டுவார். அதன்மூலம்விளம்பரம்தேடிக்கொள்ளலாம்என்றுநினைக்கிறீர்களா?.  இதுஇயல்புதான். ஏன்என்றால் அவர்தான் இன்றுஇலக்கியஉலகில் எல்லோராலும்கொண்டப்படுகிறார். நீங்கள்செய்வதைப்பார்த்தால்எனக்குஒருபழமொழிதான்ஞாபகம்வருக்கிறது. சூரியனைப் பார்த்து நாய்குரைத்தால்……. வருண் varunsaran769513@gmail.com தம்பி வருண், வாசிப்பு ஒரு மனிதனை எந்த அளவுக்கு மிருகமாகவும் ஆக்கக் கூடும் என்று உன் கடிதத்திலிருந்து புரிந்து கொள்கிறேன்.   துவேஷம் ஒரு நோய்.  அந்த நோய் உனக்கு அதிகபட்ச தீமைகளைக் கொடுக்கும்.  அப்படிப் பார்க்கும் போது நீ தான் உனக்கே சத்ருவாக … Read more

இமயம் (12)

சாரு..இசையைரசியுங்கள்…வேண்டாம்என்றுசொல்லவில்லை.. ஆனால்தயவுசெய்துஇப்படிபகிராதீர்கள்… நீங்கள்செய்வதைஎல்லாம்தானும்செய்ய முயன்றுபார்க்கும்உங்கள்தலைமைச்சீடரான உத்தமத் தமிழ் எழுத்தாளர், இமயமலைப்பயணம்மேற்கொள்ளபோகிறாராம்…அதுஅவரது தனிப்பட்ட விஷயம்… பரவாயில்லை.. ஆனால்இசையைப்பற்றிநீங்கள்எழுதவதைப்பார்த்து , அவரும்இசைகளின்வழியேஎன்றோஅல்லது இசையின்ஊடாகதத்துவதரிசனம்என்றோஎழுதஆரம்பித்தால்தமிழகம்தாங்காது… பிச்சைக்காரன் அன்புள்ள பிச்சை, என்னுடைய தலைமைச் சீடரை நான் அங்கீகரிக்கவில்லை.  சகுனி யாரைப் பற்றி எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தான் என்பது உங்களுக்குத் தெரியும்.  உ.த.எ.வுக்கு இயங்கு சக்தியாக இருப்பதே என் எழுத்தும் செயலும்தான் என்கிற போது சந்தோஷம்தான் ஏற்படுகிறது.  ஆனால் பரிதாபமும் ஏற்படுகிறது.  என்னென்னவோ கண்றாவி கதைகளைப் படித்துக் கொண்டு, எங்கெங்கோ போய் தங்கியதற்கான அறை … Read more