4. வெற்றிடம்
நீ இல்லாமல் போனால் நீ இருந்த இடத்தை என்ன செய்யட்டும் எனக் கேட்கிறாய் தஸ்தயேவ்ஸ்கி அனா இருவரின் கதை சொன்னேன் திரும்பவும் கேட்கிறாய் ”நீ இல்லாத வெற்றிடத்தை என்ன செய்யட்டும் நான்?” என் பெயர் நிகானோர் பார்ரா என்கிறேன்

”எழுதாதவன் எழுதியிருக்கும் கவிதை எப்படியிருந்ததென்று சொல்” என்றேன். ”நட்சத்திரங்களின் காலம் கற்பனையில் எட்டாதது புழுக்களின் காலம் கண் சிமிட்டலில் முடிந்து போகும் கண் சிமிட்டும் காலத்தில் நட்சத்திரங்களை வாழ்ந்திருக்கிறாய் ஒரு அதிசயத்தை எப்படியென்று யாரால் விளக்க முடியும் அன்பே?” என்கிறாய்.
எனது நிறைவேறாத கனவு ஒன்று உண்டென்றால் அது பியானோ கலைஞனாக வேண்டும் என்பதுதான். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கூட அது பற்றி மிகவும் யோசித்தேன். சாந்தோமில் என் வீட்டுக்கு எதிரே பியானோ கற்பிக்கும் பள்ளி இருந்தது. அலையவே வேண்டாம். ஆனால் தினமும் நான்கு மணி நேரம் பயிற்சி எடுக்க வேண்டும். ஆரம்பப் பயிற்சி ஸ்கேல்ஸ், விரல் பயிற்சி மற்றும் டெக்னிக். இரண்டாவதுதான் கடினம், ஸைட் ரீடிங். இது முன்னதாகவே பயிற்சி எடுக்காமல் கண் முன்னே நோட்ஸை வைத்துக்கொண்டு … Read more