குதிரைவால் எழுத்தாளர் ஜி.ராஜேஷ்: காணொலி
https://www.facebook.com/permalink.php?story_fbid=655594939101735&id=100039537052679&comment_id=655934112401151
https://www.facebook.com/permalink.php?story_fbid=655594939101735&id=100039537052679&comment_id=655934112401151
ஔரங்ஸேப் 100ஆவது அத்தியாயம் முடிந்ததை ஒட்டி ஆரோவில் கிராமத்தில் 19-ஆம் தேதி நடக்க இருக்கும் விழாவுக்கு வர விரும்புவோர் வினித்தைத் தொடர்பு கொள்ளலாம். வினித் எண்: 84384 81241 இந்த விழாவுக்கு ஆகும் செலவில் சிறு பகுதியைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் நண்பர்கள் ரேஸர் பே மூலம் அல்லது நான் ஏற்கனவே கொடுத்துள்ள வழிகள் மூலம் அனுப்பலாம். ரேஸர் பே மூலம் அனுப்புவது மிகவும் சுலபம். ஒரு பட்டனை அமுக்கினால் நாம் அனுப்ப விரும்பும் தொகை உரிய … Read more
கனாவிலொரு பூனை ஸ்னேகிதீ… உன்னைப் போலத்தான் நானும் மனிதர்களைக் காட்டிலும் பூனைகளையே அதிகம் நேசிக்கிறேன் ஆனால் பூனைகள் வேற்றுக்கிரக ஜீவிகளைப் போல் சிந்திக்கின்றன நடந்து கொள்கின்றன திடீர் திடீரென காணாமல் போய் திடீர் திடீரெனத் தோன்றும் புதிர்த்தன்மை கொண்டவையாக இருக்கின்றன பூனைகளின் மனதில் என்ன இருக்கிறதென்று பூனைகளின் கடவுளுக்கே தெரியாது பூனைகளுக்கே தெரியுமா என்பதும் ஐயம்தான் சமயங்களில் மனம் மிக நொந்து பூனைகளே வேண்டாமென்று வாழ்ந்திருக்கிறேன் சிருஷ்டியின் வினோதம் பூனையின்றி வாழ்க்கையில்லை என்கிறது போ போ மீண்டும் … Read more
பின்வரும் குறிப்பு அராத்து ஃபேஸ்புக்கில் எழுதியது. இது என் கருத்தும் கூட. பாரதிராஜா தன்னுடைய படத்தின் ப்ரீவ்யூவுக்கு அவரேதான் எனக்கு ஃபோன் செய்து அழைத்தார் என்பதையும் இங்கே நினைவுபடுத்திக் கொள்கிறேன். இப்போது அராத்து எழுதியதைப் படியுங்கள்: எனக்கு ஒரு போன்கால். தன்னை அசோஸியேட் இயக்குநர் என அறிமுகப்படுத்திக்கொண்டு , ஒரு படத்தின் ப்ரிவியூ ஷோவுக்கு அழைக்கிறார். சரிங்க என்று சொல்லி விட்டு நான் போகவில்லை. இதற்கு முன்பும் இதைப்போல “யார் யாரோ” சில படங்களுக்கு அழைத்தும் நான் … Read more
கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து தங்களுக்கு விருப்பமான தொகையை சந்தாவாகச் செலுத்தலாம். நவீன தமிழிலக்கியம், உலக சினிமா, உலக இலக்கியம், அதிகம் கண்டுகொள்ளப்படாத டிரான்ஸ்கிரஸிவ் லிட்ரேச்சர், அரபி இலக்கியம், உலக அரசியல் என கடந்த 25 ஆண்டுகளாக இந்தத் தளம் உலகத் தமிழர்களுக்கு வழங்கியது ஏராளம். ஒரு பல்கலைக் கழகம் அல்லது தமிழிலக்கிய ஆராய்ச்சி நிறுவனம் போன்ற பெரு அறிவுசார் துறைகள் செய்ய வேண்டியதை ஒற்றை ஆளாக சாரு நிவேதிதா செய்து வந்திருக்கிறார். கடந்த 25 … Read more
என் அன்புக்குரிய வாசகி ப்ரியதர்ஷினி ஒரு கடிதத்தில் என்னை மிகவும் நெகிழச் செய்து விட்டார். அந்தக் கடிதத்தைப் பலமுறை படித்தேன். டியரஸ்ட் சாரு என்று ஆரம்பித்திருந்த அந்த முதல் வார்த்தையில் எல்லையற்ற அன்பின் ஓர் வெளிப்பாட்டைக் கண்டேன். அக்கடிதத்தில் அவர் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தார். ஒன்று, என்னுடைய மன அழுத்தத்துக்கான தீர்வு எதுவும் சொல்லத் தெரியவில்லை. ஆனால் அந்த மன அழுத்தத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. கடிதம் ”Despite such intolerant stuff happening around, you … Read more