சீலே பயணம்
SOTC ட்ராவல் கம்பெனியின் அணுகுமுறை மிகவும் professional-ஆக இருக்கிறது. ப்ரஃபஷனல் என்றால் அதன் அடிப்படை அம்சம், தொடர்பு கொள்ளுதல். பயணத் திட்டத்தை உங்களுக்கு நான்கு நாட்களில் அனுப்பி வைக்கிறேன் என்றார் கம்பெனி பிரதிநிதி. சொன்னபடியே அனுப்பி விட்டார். அனுப்பி விட்டுத் தொலைபேசியிலும் பேசினார். நான் சந்தியாகோவில் மேலும் இரண்டு நாட்கள் தங்க வேண்டுமே என்றேன். ஓ, தங்கலாமே என்றார். அந்த இரண்டு நாட்களும் எனக்குப் பயண உதவியாளர் வேண்டுமே என்றேன். அதெல்லாம் நீங்கள் கேட்காமலேயே செய்யப்படும் என்றார். … Read more