SOTC ட்ராவல் கம்பெனியின் அணுகுமுறை மிகவும் professional-ஆக இருக்கிறது. ப்ரஃபஷனல் என்றால் அதன் அடிப்படை அம்சம், தொடர்பு கொள்ளுதல். பயணத் திட்டத்தை உங்களுக்கு நான்கு நாட்களில் அனுப்பி வைக்கிறேன் என்றார் கம்பெனி பிரதிநிதி. சொன்னபடியே அனுப்பி விட்டார். அனுப்பி விட்டுத் தொலைபேசியிலும் பேசினார். நான் சந்தியாகோவில் மேலும் இரண்டு நாட்கள் தங்க வேண்டுமே என்றேன். ஓ, தங்கலாமே என்றார். அந்த இரண்டு நாட்களும் எனக்குப் பயண உதவியாளர் வேண்டுமே என்றேன். அதெல்லாம் நீங்கள் கேட்காமலேயே செய்யப்படும் என்றார். இப்போது இதை எழுதும் காரணம், என்னோடு இன்னொருவரும் இருந்தால் செலவு பாதியாகக் குறையும். ஏனென்றால், தங்கும் அறைகள் மிக விஸ்தாரமாக இருக்கும். தாராளமாக இரண்டு பேர் தங்கலாம். ஆனால் நான் ஒருவன் என்பதால் இரண்டு பேருக்கான செலவை நான் ஒருத்தனே கொடுக்க வேண்டும். சரி, க்ரூப்பில் இருப்பவரோடு தங்கலாமே, அல்லது, அவர் என்னோடு தங்கலாமே என்று கேட்டேன். ம்ஹும். அந்த அளவுக்கு உலகம் இன்னும் முன்னேறவில்லையாம். தெரிந்தவர்களை மட்டும்தான் அப்படி இரண்டு இரண்டு பேராகக் கோர்த்து விடுவார்களாம். கடந்த மார்ச்சில் நான்கு பேர் ப்ரஸீல் கார்னிவலுக்குப் போகத் திட்டமிட்டார்களாம். எட்டு பேராக இருந்தால் செலவு பாதியாகக் குறையும் என்று ட்ராவல் நிறுவனத்தில் சொல்லவே மேலும் நான்கு பேரை கஷ்டப்பட்டு அழைத்து வந்தார்களாம். உதாரணமாக, 1,60,000 டிக்கட் 90,000ஆகக் குறைந்ததாம். விமானத்திலும் குழுவாகச் சென்றால் டிக்கட் விலையைக் குறைக்கிறார்களாம். எனவே ட்ராவல் ஏஜெண்ட் என்னை இன்னொரு ஆளை அழைத்து வரச் சொன்னார்.
யாரேனும் வர முடியுமா?
ஜூன் 29-ஆம் தேதி பயணம் ஆரம்பம். இந்தப் பயணம் முழுக்க முழுக்க பெரூவையும் பொலிவியாவையும் மையப்படுத்தியது. திட்டத்தைப் பாருங்கள்.
முதல் இரண்டு தினங்கள் லீமா.
மூன்றாம், நான்காம் நாள்: குஸ்கோ, Sacred valley.
ஐந்து, ஆறு: மாச்சு பிச்சு. ஏழாம் நாள்: பூனோ.
எட்டிலிருந்து பத்தாம் நாள் வரை: லா பாஸ் (பொலிவியா)
11, 12 ஆவது நாள்: உயூனி (உயூனி பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். Uyuni –உலகின் மிகப் பெரிய அதிசயம்)
13, 14: ஸான் பெத்ரோ அத்தாகாமா (San Pedro de Atacama) SOTC நிறுவனத்தை இன்னொரு விஷயமாகவும் பாராட்டலாம். சீலே போனால் ஸான் பெத்ரோ அத்தாகாமாவை நிச்சயம் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அது எப்படியும் எஸ்.ஓ.டி.சி.யின் பயணத் திட்டத்தில் இருக்காது என்று முடிவு கட்டி அங்கேயும் நான் போக வேண்டும் என்று சொல்ல போன் செய்யப் போனேன். ஆனால் அதற்கு முன் எதற்கும் கொஞ்சம் பயணத் திட்டத்தைப் பார்த்து விடுவோம் என்று பார்த்தால் அது இருக்கிறது. விவரமான ஆட்கள்தான் என்று நினைத்துக் கொண்டேன்.
15, 16: ஸந்த்தியாகோ மற்றும் வால்பராய்ஸோ. இந்த வால்பராய்ஸோ தான் பாப்லோ நெரூதா வாழ்ந்த ஊர்.
இதோடு பயணம் முடிகிறது. நான் இது தவிர ஈஸ்டர் தீவுகளைப் பார்க்கவும் திட்டமிட்டிருக்கிறேன். ஈஸ்டர் திவுகள் உலகின் வடக்கு தெற்கு எல்லைகள் பனிப்பிரதேசங்களாக இருப்பது போல் ஈஸ்டர் தீவுகள் இந்த பூமி உருண்டையின் மேற்கு மூலை. கடல் கொண்டு விட்ட குமரிக் கண்டம், கபாட புரம் என்றெல்லாம் சொல்கிறோம் இல்லையா, அப்படிப்பட்ட mythical தீவுகள் – ஆனால் நம் கண் முன்னே ஸ்தூல உருவில் இருக்கின்றன.
நீங்கள் அமெரிக்காவிலோ கனடாவிலோ இருந்தால் இந்தப் பயணத் திட்டத்தில் மிகச் சுலபமாக இணைந்து கொள்ளலாம். லீமா விமான நிலையத்துக்கு ஜூன் 29 சனிக்கிழமை அன்று வந்து விட்டால் போதும். அமெரிக்கவாசிகளுக்கு வீஸா மிகச் சுலபம். அல்லது, நீங்கள் என்னைப் போல் மைலாப்பூர்வாசியாக இருந்தால் இப்போதே எனக்கு எழுதுங்கள், எஸ்.ஓ.டி.சி.யில் பேசி விடலாம்.
இவ்வளவு தூரம் வருகிறீர்களே, கொஞ்சம் டொரண்டோவையும் எட்டிப் பாருங்கள் என்று சொன்னார் என் நண்பர் மணிவண்ணன். டொரண்டோவில் வசிக்கிறார். அதையும் யோசிக்க வேண்டும்.
charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai