படச்சுருள் விழாவில்…

ஞாயிற்றுக்கிழமை மாலை அருணின் தமிழ் ஸ்டுடியோஸ்/ப்யூர் சினிமா அரங்கில் நண்பர்கள் அருண், ஜனநாதன், வஸந்த், மிஷ்கின் ஆகியோருடன் நானும் பேசினேன்.  படச்சுருள் பத்திரிகையின் முதலாம் ஆண்டு விழா.  நான் சுமார் 15 நிமிடங்கள் பேசினேன்.  இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாம்.  ஆனால் அதற்கு சற்று முன்னால் தான் நியூஸ் 18 என்ற சேனலுக்கு இரண்டரை மணி நேரம் சினிமாவும் இலக்கியமும் என்ற தலைப்பில் ஒரு நீண்ட உரையை நிகழ்த்தியிருந்தேன்.  அதையே திரும்பவும் அந்த விழாவில் பேசத் தெம்பு இல்லை. … Read more

இந்திய எழுத்தாளனும் உலகமயமாக்கலும்! – தி இந்து கட்டுரை

புகைப்படம்: பிரபு காளிதாஸ் ஐரோப்பியர்கள் 1945-இல் ஒன்றைப் புரிந்துகொண்டார்கள். தேசியம் பட்டினி போடும்; செல்வத்தையெல்லாம் ராணுவத்துக்குச் செலவிட்டுவிட்டு நாம் உருளைக் கிழங்கைத் தின்று வாழ வேண்டுமா என யோசித்தார்கள். விளைவு, ஐரோப்பிய ஒன்றியமாக இணைந்தார்கள். விசா போன்ற அனுமதிச் சீட்டுகள் இல்லாமலேயே ஐரோப்பா முழுவதையும் ஒருவர் சுற்றி வர முடிகிறது. ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் ஒரே பணம். ஆனால், இங்கே ஒரே நாடாக இருந்த இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் எல்லாம் ஒன்றை ஒன்று விரோதம் பாராட்டிக் கொண்டிருக்கின்றன. … Read more

மாதொருபாகன் பற்றி

இன்று இரவு ஒன்பது மணிக்கு, ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில், ‘நேர்படப் பேசு’ என்ற விவாத நிகழ்ச்சியில் சாரு நிவேதிதா கலந்துகொள்கிறார். நண்பர்கள் அவசியம் பார்க்கவும். – ஸ்ரீராம்  

பழுப்பு நிறப் பக்கங்கள்: சா. கந்தசாமி (பகுதி 1)

சாயாவனம் முதல் வாசிப்பில் ஒரு வாசகரை ஏமாற்றி விடக் கூடிய தன்மை கொண்டது. தி. ஜானகிராமனைப் போன்ற ஆடம்பரமான வர்ணனைகளையோ, லா.ச.ரா.வைப் போன்ற கவித்துவமான நீரோடைகளையோ கொண்டதல்ல சாயாவனத்தின் மொழி. மேல்பார்வைக்குக் கொஞ்சம் தட்டையாகவே தெரியும். ஆனால் அதன் உள்ளே நீறு பூத்த நெருப்பாக இருப்பது ஒரு மகத்தான தத்துவம். அதுதான் இந்த நாவலின் சிறப்பு. மேலும் படிக்க: http://bit.ly/29C3vsO  

“சாரு ஒரு பத்தி எழுத்தாளர் மட்டுமே”

சாரு, சமீபத்தில் உங்கள் மேல் ஒரு அதிருப்தி ஏற்பட்டது. அது அவ்வப்போது ஏற்படக்கூடிய ஒன்று தான். ஆனால் சமீபத்தில் ஏற்பட்டது உங்கள் ரசனையின் மேல். நான் உங்களை கடந்த எட்டு வருடங்களாக படித்து வருகிறேன். நீங்கள் எழுதியவற்றில் இரண்டு மூன்று புத்தகங்களைத் தவிர (ரெண்டாம் ஆட்டம், தீராக் காதலி, எங்கே உன் கடவுள் (துக்ளக் அப்போது கையில் கிடைக்க வில்லை)) மற்ற எல்லாவற்றையும் படித்திருக்கிறேன். அந்த வகையில் என் சிந்தனைப் போக்கில் உங்கள் தாக்கம் அதிகம் இருந்தது. … Read more