அமிர்தம் வேண்டி நின்றேன்…
வரம் கேள் என்றால்யாராவது கையில் இருப்பதையேதிரும்பவும் கேட்பார்களா? இருப்பதை இல்லாததாய்க்காண்பவனே கவிஅதுவும் தவிரநீகுரலாக ஒலிக்கிறாய்நினைவாக இருக்கிறாய்தூலமாக இல்லையே தியாகராஜன் தன் கடவுளைத்தூலமாகக் காணவேஉஞ்சவிருத்தி செய்துஉருகியுருகிப் பாடினான்என்பதைஉனக்குநான்நினைவூட்ட வேண்டுமா? க்ஷீரசாகர சாமி மோகினியாய்மாறி அமிர்தத்தைதேவருக்குஊட்டியதாய்க் கதை நீயெனக்கு அமிர்தம்தருவது எப்போது?