சிறுகதைப் பயிற்சிப் பட்டறை பற்றி நான் முன்பு குறிப்பிட்டிருந்தேன். வருகின்ற மே முதல் வார இறுதியிருந்து தொடங்கலாம் என்று நினைக்கிறேன். வார இறுதியில் ஒரு நாள் – இரண்டு மணி நேரம் – வீதம் ஐந்து வகுப்புகள். ஐந்து வார இறுதி நாட்களில். மொத்தம் பத்து மணி நேரம். ஒரு சிறுகதை எப்படி உருவாகிறது? சம்பவத்துக்கும் சிறுகதைக்கும் என்ன வேறுபாடு? சிறுகதையில் தவிர்க்க வேண்டியவை எவை? இவற்றோடு தமிழின் சிறந்த சிறுகதைகள் பற்றிய உரைகள். உலகின் முக்கியமான சிறுகதைகள் பற்றிய அறிமுகம். அதோடு, மிகச் சிறிய சிறுகதைகள் எழுதுவது எப்படி? பயிற்சிப் பட்டறை என்பதால் சிறுகதை எழுதவும் பழகலாம். மீண்டும் சொல்கிறேன். சிறுகதை எழுதுவது என்பது ஒரு தொழில் நுட்பம். விமானம் ஓட்டுவதைப் போல. அதை நாம் பயில வேண்டும். எப்படிப் பயில்வது என்பதற்கான பாடத் திட்டத்தை நான் தருகிறேன்.
கட்டணம் ஐந்து வகுப்புகளுக்கும் சேர்த்து 500 டாலர். (மொத்தம் பத்து மணி நேரம்) இதுவரை ஐந்து பேர் சேர்ந்திருக்கிறார்கள். இன்னும் ஏழெட்டு பேர் தாங்கும். யாராவது வகுப்புக்கு வர முடியாது போனால் பதிவு செய்யப்பட்ட உரைகளும் மற்ற குறிப்புகளும் அனுப்பி வைக்கப்படும். எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com