அக்கறையின்மை

நான் இப்போது எழுதுவதைப் படித்துக் கோபம் அடையாதீர். கோபம் கொண்டால் நஷ்டம் எனக்கு இல்லை. உங்கள் மீதுள்ள அன்பின் காரணமாகவே என் நேரத்தை செலவழித்து இதை எழுதுகிறேன். இது பற்றி முன்பே எழுதியிருந்தேன். இந்த விவரம் கிடைக்கும் லிங்க்கும் கொடுத்திருந்தேன். ஆனால் யாருமே – ஆம், யாருமே – இது பற்றிக் கவலைப்படாமல் நீங்கள் பாட்டுக்கு உங்கள் போக்கிலேயே சென்று கொண்டிருக்கிறீர்கள். அப்படியானால் நான் என்ன வேலையற்றவனா? ஏற்கனவே லிங்க் கொடுத்தும், வழி என்ன என்று சொல்லியும் அது பற்றி அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் என்ன அர்த்தம்? ஒற்றுப் பிழை இல்லாமல் எழுத நீங்கள் செலவு செய்ய வேண்டியது வெறும் அரை மணி நேரம் மட்டுமே. பானுமதி என்ற பெண்மணி இதைச் சொல்லிக் கொடுக்கிறார் என்று எழுதி விட்டேன். ஆனாலும் யாருக்கும் அக்கறை இல்லை. அதனால் மீண்டும் அதைத் தேடி எடுத்துத் தருகிறேன்.

இதில் இன்னொரு விபத்து என்னவென்றால், யாருமே சந்திகளில் ஒற்று போடுவதில்லை என்று எழுதினேனா, உடனே போடு ஒற்றை, எல்லா சந்திகளிலும் என்று போட்டுத் தாக்குகிறார்கள். ஒற்று இல்லாமல் போவதை விட இது பயங்கரம்.

https://www.youtube.com/watch?v=HAuIt7nMPbE