காலையில் வயலன்ஸ் வேண்டாம்…

இன்று மாலை ஆறு மணிக்கு க்ளப் ஹவுஸில் உரையாடல். முதல் பதினைந்து நிமிடங்கள் ஒரு முக்கிய விஷயம் பற்றிப் பேசி விட்டு பிறகு உரையாடல். தயை கூர்ந்து யாரும் மது அருந்தி விட்டு வர வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அப்படி அருந்தியே தீருவேன் என்றால் ஒரு பெக்கோடு நிறுத்திக் கொள்ளுங்கள். ஒயினாக இருந்தால் ஒரு கிளாஸ் போதும். மீதியை ஒன்பது மணிக்கு மேல் பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் நிதானமாகவே பேசினாலும் மற்றவர்கள் கண்டு பிடித்து விடுகிறார்கள். என்ன செய்வது இது ஃப்ரான்ஸ் இல்லையே? சந்திப்போம்.

தமிழ் சினிமா மற்றும் சக எழுத்தாளர்கள் பற்றிய கேள்விகளைத் தவிருங்கள். மீறிக் கேட்டால் பதில் தர மாட்டேன் என்ற பதிலையே தருவேன்.

நேற்று பார்க்கில் நடந்து கொண்டிருந்த போது எனக்குத் தெரியாத ஒருவர் “எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்து பற்றி என்ன நினைக்கிறீர்கள் சார்?” என்று கேட்டார். நோபல் பரிசு வாங்க வேண்டிய எழுத்தாளர், என் நெருங்கிய நண்பர் என்றேன். “என்ன ஒரு தாராள மனசு சார் உங்களுக்கு!” என்று சொல்லி விட்டு நகர்ந்து விட்டார். அவரைக் கூப்பிட்டு செவுளிலேயே ஒன்று கொடுக்கலாமா என்று தோன்றியது. சரி, காலையிலேயே வயலன்ஸ் வேண்டாம் என்று விட்டு விட்டேன்.

https://www.clubhouse.com/…/zero…/hqen5nVt/xkjKqWlD…