அவதூறுக்கு எதிர்வினை (3): செல்வகுமார் கணேசன்

முதல் அறம்: கவிதை: செல்வகுமார் கணேசன்

செத்தது தன் அப்பன் இல்லை

என்றதும் இளிப்புடன்

நகர்வது இயல்பென்று ஆகிவிட்டது

அமைதியாக இருப்பது

மிக நல்ல குணம் என்று

சொல்கின்றன

கல்லறை சவங்கள்…

பிடிக்காத ஒருவன் தாக்கப்பட்டதும்

குருதி ருசிக்க ஆர்வப்படுகின்றன

மிருகங்கள்

ஏளனம்

சொற்களின் வழியே கசிவது

அவரவர் உயிர்தான் என அறியாமல்

தமிழினி மெல்லச் சாகும்

எனப் பாடப்பட்டது

முதல் அறம்