ஔரங்கசீப் – எதிர்வினைகள் – 1

நான்தான் ஔரங்கசீப்… நாவலுக்கு வந்த எதிர்வினைகளில் சிலவற்றை இங்கே பகிர்கிறேன். இதுவரை நாவலின் அத்தியாயங்கள் சுமார் 30000 வாசிப்புகளை எட்டியிருக்கிறது. 3000 பேர் படித்திருப்பார்கள் போல. ஆனால் ஆரம்பித்தால் முடிக்காமல் இருக்க முடியாது. எனவே இந்த 3000 என்ற எண்ணிக்கை குறைய வாய்ப்பு இல்லை. சில பேர் இதெல்லாம் பாடப் புத்தகங்களில் படித்ததில்லையே என்று எழுதியிருக்கின்றனர். அதனால்தானே நாவலாக எழுத வேண்டியிருக்கிறது? பாட நூல்களில் அரசாங்கம் என்ன எழுத விரும்புகிறதோ அதைத்தானே எழுதும்? மேலும், நான் எழுதுவது மட்டுமே உண்மை என்று நான் சொல்ல மாட்டேன். இதுவும் ஒரு பார்வை. என்னுடைய பார்வை. அவ்வளவுதான். இந்தப் பார்வை சரியாக இருக்க நிறைய வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், ஔரங்கசீப் உடன் இருந்த பெர்னியே எழுதியிருப்பதும் என் பார்வையை ஒட்டியே இருக்கிறது. ஆனால் ஔரங்கசீப்பின் கடைசிப் பத்தாண்டுகளில் பெர்னியே இல்லை. ஐம்பது ஆண்டுகள் அரசாண்ட ஒருத்தரைப் பற்றி எப்படி ஒரு நேர்க்கோடான மதிப்புரையை வைக்க முடியும்? முதல் பத்தாண்டுகள் ஒரு மாதிரியும், அடுத்த முப்பது ஆண்டுகள் ஒரு மாதிரியும், கடைசி பத்தாண்டுகள் மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சியைச் சுட்டுவதாகவும் இருந்தன. இந்திய அரசும், ஃபிரங்கியரும் முக்கியத்துவம் கொடுத்தது இந்தக் கடைசிப் பத்து ஆண்டுகளை. நான் இந்த இறுதிக் கட்டத்தை எப்படிப் பார்க்கிறேன் என்பது நாவலின் கடைசியில் வரும். அது ஒரு மகா காவியத்தின் இறுதியைப் போல் இருக்கும். இறுதிப் பகுதியை ஆரம்பத்திலேயே எழுதி முடித்து விட்டேன். எழுதும் போதும் எழுதி முடித்த போதும் அது பற்றி நினைக்கும் போதும் கிரேக்க காவியங்களில் வரும் கோரஸ் செவிகளில் ஒலிப்பது போல் இருந்தது. கிரேக்க நாடகங்களைப் படித்ததும் பார்த்ததும் உதவியாக இருந்தன.

இனி எதிர்வினைகள்:

முன்கதை – 1

வரலாற்றின் ஒருசில துளிகளை இதுபோன்ற வரலாற்றுக் கதைகளின் மூலமே அறிந்து கொள்ளமுடியும் – சரவணகுமார்

ரஜினி பட டைட்டில் சாங் போல சரவெடிப் பட்டாசாகத் துவங்கியிருக்கிறார். தொடரட்டும், சிறக்கட்டும் உங்கள் உயர்ந்த பணி. – ரஹ்மான்

ஒரு முஸ்லீமாக வாழ்ந்து கொண்டிருக்கும் சாருவைவிட யார் ஔரங்கசீப்பைப் பற்றி சிறப்பாய் எழுதிவிட முடியும். வாழ்த்துக்கள் சாரு. – ஜெயசந்திரன் மலைச்சாமி

முன்கதை 2

சாரு தொடர்ன்னாலே ஆபாசம்ன்னு ஒதுங்குறவங்க அவரின் பரந்துபட்ட அறிவையும், சிந்தனையையும் நிச்சயமாக இழக்கறாங்க. இதைத் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்திவரும் Bynge அமைப்பிற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். ஆடியோ தொடர்களும் இன்னும் சிறந்த நாவல்களும் வெளிவர வேண்டும் – ராஜ்குமார்

முன்கதை 3

Great to know about greats of the history. Super thank you Charu. – அருண்காந்தி நவநீதன்

முன்கதை – 4

ஏதோ நானே என்னைத் திரும்பிப்பார்ப்பது போல உள்ளது. நான் மட்டுமல்ல பலரின் மனக்குமுறல்களையும் பகடியுடன் அங்கங்கே தெளித்து, சிந்திக்க வைத்திருக்கிறீர்கள்! பிரமாதம் சாரு – சரோஜா சிவராம்

முன்கதை – 5

எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. என் பிள்ளைகளுக்கும் இந்தக் கதையை சொல்லிக்கொண்டிருக்கிறேன். நன்றி எழுத்தாளர் அவர்களே – தேனிலா

பொது எதிவினைகள்

பொன்னியின் செல்வன் நாவல் தொடராக வரும்போது மக்கள் எந்த அளவிற்கு சிலாகித்து இருப்பார்களோ எனக்குத் தெரியாது. ஒவ்வொரு தொடரிலும் பரவசம் அடைகிறேன். சாருவின் இந்த நாவல் இன்னும் சில நாட்களில் உலகெங்கும் சாருவைப் பற்றி பெருமை பேசப்போகிறது. – சிவபாரதி தமிழழகர்.

சாருவின் எழுத்தில் இது ஒரு “வரலாற்று” மைல்கல். ஔரங்கசீப்பின் வரலாற்றுக்கு இது ஒரு புதிய பார்வை – அனீஸ் அஹமத்

மிக ஆவலாகக் காத்திருக்கிறேன் அடுத்தடுத்த அத்தியாயங்களுக்காக – எழிலரசி சந்திரமோகன்

சாரு ரொம்ப புத்திசாலி. தன்னுடைய கருத்தை எல்லாம் ஔரங்கசீப் ஆவி சொல்வதாகக் கொண்டு வருகிறார். – பாலசுப்பிரமணி.

சாரு முதல் முறையாக வரலாற்றுப் பின்னணியில் எழுதியிருக்கிறார். இதற்காக பல புத்தகங்களைப் படித்துத் தரவுகளைத் திரட்டியிருக்கிறார். ஆரம்ப அத்தியாயங்களிலேயே கடும் உழைப்புத் தெரிகிறது. இது ஒரே அமர்வில் படிக்க வேண்டிய புத்தகம். ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் காத்திருப்பது கொடுமையாக உள்ளது. தயவுசெய்து பிஞ்ச் நிறுவனத்தார் தினம் ஒரு அத்தியாயமாவது வெளியிட வேண்டுகிறேன். – செந்தில்குமரன்.

முங்கதையிலேயே எத்தனை அரிய தகவல்கள். பரங்கியர் என்ற வார்த்தை உருவானவிதம் இப்போதுதான் அறிந்துகொண்டேன். எள்ளல், பகடி போன்றவற்றின் மூலமாக சிரிக்கவைக்கும் அதே சமயம் கதையின் அடுத்தடுத்த அத்தியாயத்தை எதிர்நோக்கவும் வைத்துவிடுகிறார். – திரு

என்ன சொல்றதுனே தெரியல. வேற level. Sarcasm of the first order! Brutally honest! Charu sir is simply invincible! – சாருலதா

அருமையான பகடி. முடியல சிரித்து சிரித்து. பார்ப்பவர்கள் என்னைப் பைத்தியம் என்று நினைக்கிறார்கள். முன்கதையே இப்படின்னா, அத்தியாயங்கள் என்ன ஆகுமோ தெரியவில்லை. அருமை சாரு – பெரியசாமி

பல காலம் கழித்து ஒரு தொடரின் அடுத்த அத்தியாயத்திற்கான காத்திருத்தல் என்பது எப்படி இருக்கும் என்று உணர்கிறேன். – ஸ்ரீமீனாக்ஷி

இஸ்லாமிய இலக்கிய உலகில் தன் வருகையை பதிவு செய்துவிட்டார் சாரு. The Adventures of Amir Hamza போல விறுவிறுப்பாக உள்ளது. – சுதர்சன் வேலாயுதம்

துவக்கமே மிகவும் சிறப்பாக உள்ளது. சாருவின் வழியாக சரித்திரம் அறிவதும், அற்புத பயணம் செல்வதும் நான் செய்த பாக்கியம் – பா.சுதாகர்

தொகுத்தவர்: பிரியதர்ஷிணி