நான்தான் ஔரங்கசீப்… சில எதிர்வினைகள் (2)

அத்தியாயம் 1

அருமையான தொடக்கம். சரித்திரக் கதைகளையே விரும்பிப் படிக்கும் எனக்கு திருநெல்வேலி அல்வா கிட்டியுள்ளது. – ஹேமலதா

குர்ஆனைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது – மலர் ஈஸ்வர்

கதை சொல்லலின் தொடக்கமே, வாரணம் ஆயிரம். சாரு நிவேதிதா, தமிழ் இலக்கியத்தின் தமிழ்மகன். – கவி சிவா

இந்துக்கள் இதை மனப்பக்குவத்துடன் எந்த வித மதத்துவேஷம் இல்லாமல் வாசிப்பார்கள். ஏன் நமது வீரத்துறவி விவேகானந்தர் கூட பல பொக்கிஷங்களை தன்னடத்தே கொண்ட மார்க்கம் என தன் நூல்களில் குறிப்பிட்டுள்ளார். நல்லக் கருத்துகளை பகிரும் உங்களை இறை காக்க. – சுதர்சன்.

அத்தியாயம் 2

ஆசிரியரின் கதைநடையழகு என்னைக் குழப்பி நான் ஔரங்கசீப்பை காதலிக்கிறேனா? தற்காலத்திலிருக்கிறேனா? என்ற சந்தேகத்திற்குள்ளாக்கிவிட்டது. கிள்ளிப் பார்த்துக்கொண்டேன். – ராதாகிருஷ்ணன்

வரலாறு இந்த நாவலிலிருந்து திருப்பி எழுதப்பட்டுள்ளது. உடல் சிலிர்க்கிறது – ஐஜாஸ்

அத்தியாயம் 3

மொகலாய அரசவை அழகாக கண் முன் விரிந்தது. வரலாறு பிடிக்காதவர்களைக் கூட ஈர்த்துவிடும் இந்த எழுத்தின் சுவாரஸ்யம். – சாருலதா

ஔரங்கசீப் ஆவியையும் யோசிக்க வைத்து விட்டீர்கள். – ஜெபராஜ்

பள்ளி ஆசிரியர்கள் இந்தத் தொடரைக் கட்டாயம் படிக்க ஆவல் கொள்கிறேன். – லதா