ஒரு வாரமாக இரவு பன்னிரண்டு மணிக்கு உறங்கி காலை நான்கு மணிக்கு எழுந்து ஒருவழியாக ஔரங்கசீப்பின் 12 அத்தியாயங்களை எழுதி முடித்து அனுப்பி விட்டு (இதோடு முப்பது அத்தியாயங்கள் அனுப்பியிருக்கிறேன்) வாட்ஸப்பைத் திறந்தால் கீழ்க்காணும் காணொலியைக் கண்டேன். ரொம்ப நாள் ஆயிற்று இப்படிச் சிரித்து. வாழ்க்கைல ரொம்ப அடிப்பட்டிருப்பாரு போல இருக்கு – மனுஷ்.
ஏம்பா இப்டி பேரண்டல் கைடன்ஸ் இல்லாம கலாப்ரியான்னு பேர் வச்சிருக்கே?
இந்த ஆளு நாய் வளப்பாரு போலருக்கே? – சாரு
இங்கேயும் மார்க் வாங்கினது ஜெ.தான். ஜெயமோகனின் படத்தைப் போட்டு நான்கு கேள்விகள். அதற்கு அந்தப் பொடுசு சொன்ன பதில்: இவரப் பாத்தா விஷ்ணபரம் வாசகர் ஓட்டம் மாதிரிதான் தெரிது.