நான்தான் ஔரங்கசீப்… சில அபிப்பிராயங்கள்

ரூஃபினா ராஜ்குமார்: சாலையோரம் மரங்களை நட்ட அசோகருக்கு இன்னொரு முகமும் இருக்கிறதா? உண்மையிலேயே உடன் பிறந்தவர்களைக் கொன்றாரா…?

அருண்காந்தி: அற்புதம். தகுதியற்றவனின் ஆசை vs தகுதியானவனின் தியாகம்.

சாருலதா:  Ashoka the great..என்றல்லவா படித்தோம்….

இவர் Ashoka the brute ஆக அல்லவா இருந்திருக்கிறார்?

தினேஷ்: ஒரு சரித்திரம் திரும்ப எழுதப்படுகிறது.

எஸ். நேசராஜ்: இந்திய நாட்டின் சரித்திரம் மாற்றி எழுதப்பட வேண்டிய கட்டாயத்தை இந்த நாவல் ஏற்படுத்திவிடும் என்று நம்புகிறேன். அருமை.

ஜெபராஜ்:  இதுவரை சொல்லப்பட்ட சரித்திரத்தை மாற்றி எழுதும் அவசியத்தை உண்டாக்கிவிட்டீர்கள் சாரு. இதுவரை அறிந்திராத சொல்லப்படாத புதிய தகவல்களுடன் வேறு தளத்திற்கு கொண்டு செல்கிறீர்கள். 

நீங்கள் அடிக்கடி தற்காலத் தாய்மார்கள் பிள்ளைகளை வளர்க்கும் விதத்தைப் பற்றிச் சொல்வது ஞாபகத்திற்கு வருகிறது. இந்த விஷயத்தில் தந்தையும் ஒன்றும் விதிவிலக்கல்ல. ஔரங்கசீப் காலத்திலும் அதே தான் என்பது யோசிக்க வைக்கிறது. பெற்றோர்கள் ஏன் குழந்தைகளை கடினமான வாழ்விற்கு உட்படுத்துவதில்லை? 

முஸ்தாக் அஹ்மத்: சுவாரசியமாகவும் நியாயமாகவும் காத்தீப் அவர்களால் சொல்லப்படுகிறது..எனக்குள் இருந்த கேள்விகளுக்கு ஆதாரப்பூர்வமான விடைகளாகவே தொடர்கின்றது…தொடரட்டும்

மணிகண்டன்: சரி தான், ஆனால் இவர்கள் அனைவரைக் காட்டிலும் பலமான ஏதோ ஒன்று தான் முகலாய சாம்ராஜ்ஜியத்தை வீழ்ந்து போக செய்திருக்கிறது..அது எது…?

விவேக்:  The brutality of ashoka mentioned here is known by everyone. He was a brutal person. Yet he was called a great. Those who dont know atleast watch the SRK hindi film Asoka.

வஸீம் அஹ்மத்: கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் அழகிரி நினைவுக்கு வந்து போகிறார்கள்.மிகவும் மாஸாக எழுதியுள்ளீர்கள்… அருமை சாரு…

கீதா ஆர்: அசோகரைப் பற்றி அறியப்படாத முகத்தைக் காண வைத்த எழுத்தாளருக்கு நன்றி.

நெல்லைத் தமிழன்: வரலாற்றுத் தகவல்கள் ஏராளம். சுவாரசியம் அதிகம். எந்த அளவு ஆசிரியரால் உண்மையை, தான் உண்மையாக இருக்கும் என உளப்பூர்வமாக நம்பியதை, நெருங்கிச் சென்று எழுத முடிகிறதோ, அந்த அளவு இந்நூல் பெரிய உயரத்தைத் தொடும்.

சலாஹுதீன்: தொடர் மிகவும் சுவாரசியமாகச் செல்கிறது, புதிய வரலாற்றுத் தகவல்களைத் தெரிந்து கொள்கிறோம் நன்றி.

செந்தில் குமார்: அசோகரைப் பற்றிய பிம்பம் உடைந்தது. இது textbook வரலாறு அல்ல.

ஜோசஃப் ராஜ்: அசோகரின் இன்னொரு முகம் வெளிப்படுகிறது.

தொகுப்பு: வினித்