இந்தப் படத்தைப் பற்றி நான் எழுதுவதை விட நான் என்ன எழுதுவேன் என்று நீங்களே யூகித்துக் கொள்ளலாம். நேரு தாகூரை விட 28 வயது குறைந்தவர். தாகூரை விட அவர் 28 வயது மூத்தவர் என்றாலுமே தாகூரும் நேருவும் இப்படித்தான் அமர்ந்திருப்பார்கள். ஏனென்றால், காந்தியை விட பதின்மூன்று வயது சிறியவரான பாரதி காந்தி அமர்ந்திருந்த கட்டிலில் இப்படித்தான் கால் மேல் கால் போட்டு அமர்ந்ததாகவும் அதைப் பார்த்து ராஜாஜி போன்றவர்கள் அசூயை கொண்டதாகவும் காந்தி மட்டுமே அதைப் புரிந்து கொண்டதாகவும் வ.ரா. எழுதியிருக்கிறார். அந்த இரண்டு நிமிடச் சந்திப்பில் பாரதி காந்தியை ஆசீர்வதித்து விட்டுச் சென்றிருக்கிறார்.