நான்தான் ஔரங்கசீப்… கேள்விகள்/விவாதங்கள்-5

You have clearly said that it is a novel based on a real historical figure and NOT a documentary. But most of the comments seem to see this as a revised history and focus only on the ‘facts/ information. Is the literary aspect (e.g. the depiction of the ebbs and flows of relationships, the characters’ conundrums, etc) getting lost in the deluge of data?

– The narrative style – I.e. Aurangzeb himself talking via a medium, to me, feels like listening to a speaker on a stage (and not sitting with someone face-to-face, having a fireside chat). Albeit he is an interesting speaker, the format keeps me in a very passive mode, like watching a TV, and probably that is one of the reasons that the data gets more prominence than the emotional and spiritual intricacies. Is that an intended effect or am I just not able to get into the novel?

வினோத், வாஷிங்டன்

இனி வரும் அத்தியாயங்களில் சரித்திரக் குறிப்புகள் கம்மியாக இருக்கும்படி செய்யலாம் என்ற உத்தேசத்தில் இருக்கிறேன்.  பார்க்கலாம், எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை.  ஏனென்றால், மொகலாய சரித்திரம் நம் தமிழ் சினிமாவை விட அதிக சாகசமும் துயரமும் அதீத கற்பனையும் வன்முறையும் கொண்டதாக இருக்கிறது. 

உங்கள் இரண்டாவது கேள்விக்கு பதிலும் இனி வரும் அத்தியாயங்களில் தெளிவாகி விடும்.  இனி அதிகமாக உரையாடல் இடம் பெறும்.  என்னுடைய புனைகதைகளில் இதுவரை பன்முகத்தன்மை அதிகம் இருக்கும்.  வாசகருக்கான இடம் இருக்கும்.  ஔரங்கசீப்பில் இது எல்லாமே கம்மி.  காரணம், முந்நூறு ஆண்டு மௌனம் மடை திறந்து ஓடுகிறது.  ஓடட்டும் என்றே விட்டு விட்டேன்.  பேசாதவர்கள் பேச வேண்டும் இல்லையா?  எனவே, இது நான் வேண்டுமென்றே திட்டமிட்ட வடிவம்தான்.  இனி மாறும்…