அன்புள்ள சாரு நிவேதிதா அவர்களுக்கு,
நான் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன். ஒரு பக்கம், கல்லூரிக்கு சென்று தத்துவம் பயில வேண்டும் என்ற ஆசை. இன்னொரு பக்கம் திரைப்பட இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசை. எதைத் தேர்ந்தெடுப்பது என்று புரியவில்லை. நீங்கள் வழி காட்டுவீர்கள் என்று நம்புகிறேன்.
உங்கள் வாசகன்,
சுரேஷ்
டியர் சுரேஷ்,
உங்கள் பொருளாதாரப் பின்னணி தெரியாது. திரைப்படத் துறையில் முன்னணியில் வந்தவர்களிடம் கோடிக் கணக்கில் சொத்து இருக்கிறது. அவர்களின் புதல்வர்கள் திரைப்படத் துறையிலேயே நுழைகிறார்கள். (ஜெய்ஷங்கர் மகன் விஜய் ஷங்கர் விதிவிலக்கு. அவர் ஒரு புகழ் பெற்ற கண் மருத்துவர்). வாழ்க்கை பூராவும் உங்களைக் காப்பாற்ற பூர்வீக சொத்து உண்டா? இருந்தால் நிச்சயம் திரைப்படத் துறைதான். ஏனென்றால், திரைப்படத் துறை என்பது வாழ்வைப் பணயமாக வைத்து ஆடும் சூது. ஆயிரத்தில் ஒருவர் வெல்வர். தோற்றால் பிச்சை எடுக்க வேண்டும்.
அப்படியெல்லாம் இல்லை என்றால் கல்லூரிப் பேராசிரியர் வேலைதான் ஆகச் சிறந்தது. அதிலும் தத்துவம் என்றால் பேரின்பம். நீங்கள் முடிவு செய்யுங்கள். உங்கள் பதிலையும் எழுதுங்கள். பூர்வீக சொத்து இருந்தாலும் படம் எடுக்கப் போனீர்கள் என்றால், எல்லா சொத்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமல் போய் விடும். புதுமைப்பித்தனைக் கொன்றதற்கு இரண்டு காரணங்கள், ஒன்று வறுமை. இன்னொன்று, சினிமா. எனவே, கவனம் தேவை.
சாரு
அன்புள்ள சாரு நிவேதிதா அவர்களுக்கு,
யோசனையில் மூழ்கி இருந்தேன், சாரு. நான் திரைக்கதை ஏற்கனவே எழுதி விட்டேன். அதை, படமாக எடுக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அதற்காக, உதவி இயக்குநராகவோ அல்லது producer இடம் கதை சொல்லி படம் பண்ணலாம் என்றோ எண்ணம் இருந்தது. நான், பி.எஸ்ஸி உளவியல் முடித்து விட்டேன். அதில் தொடர எனக்கு விருப்பம் இல்லாமல் போனது. கல்லூரி படிக்கும் சமயத்தில்தான் திரைக்கதை எழுதினேன். கூடவே தத்துவத்திலும் ஆர்வம் வந்தது. இன்னும் சொல்ல போனால் தத்துவம்தான், என் திரைக்கதை எழுத்துக்குத் தீனி போட்டது. இப்போது, தத்துவத்தில் மூழ்க வேண்டும். அதில் எதாவது பங்களிப்பு செய்ய வேண்டும், புத்தகங்கள் எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
நான் மிடில் கிளாஸ் தான் சாரு. கையில் ஒரு டிகிரி இருக்கே, அதை நம்பி திரைத்துறையில் இறங்கலாம். புத்தகங்கள் வாங்கிக் கூட தத்துவம் படித்து கொள்ளலாம் என்ற எண்ணம் இருக்கிறது.
வழி காட்டுங்கள், சாரு. நீங்கள் இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.
உங்கள் வாசகன்,
சுரேஷ்
***
பொதுவாக எனக்கு தினமும் இது போன்று பத்து கடிதங்கள் வருகின்றன. எல்லாம் ”வழி காட்டுங்கள்”தான்.
ஒவ்வொரு கடிதத்துக்கும் சுருக்கமாக பதில் எழுதி விடுவேன். எனக்கு யாரும் இளம் வயதில் வழி காட்டாததால் இந்த ”வழி காட்டுங்கள்” கேட்கும் இளைஞர்கள் மீது எனக்கு மென்மை உணர்வு. சுரேஷ் என் கடிதத்தைப் படித்துப் புரிந்து கொள்ளவே இல்லை என்று தெரிகிறது. அதனால் இனிமேல் ”வழி காட்டுங்கள்” கடிதங்களுக்கு எந்த பதிலும் எழுதப் போவதில்லை என்று முடிவு செய்து விட்டேன். எனக்கு சுரேஷின் ஜாதகத்தை ஒரு நல்ல ஜோதிடரிடம் காட்டி அவரது எதிர்காலம் பற்றிக் கேட்கத் தோன்றுகிறது. நான் இத்தனை தெளிவாக எழுதியும் பழைய பல்லவியையே பாடுவதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவருடைய இரண்டாவது கடிதம் எனக்கு ஒரு nightmarish experience… பாவம்.
***
என்ன இது, வழக்கமான ஐந்தாறு நண்பர்களைத் தவிர வேறு யாருமே இந்த மாதம் சந்தா/நன்கொடை எதுவும் அனுப்பவில்லை? ஆச்சரியமாக இருந்தது.
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai