Living with men: காயத்ரி. ஆர்

காட்சி 1:

என் வாரிசுகள் இரண்டும் காலையில்…

நம்பர் 1: டேய்! அந்த பெட்ரோ கார்ட வச்சுட்டு போ. எனக்கு வேணும்.

நம்பர் 2: உனக்கு எதுக்கு? தண்டமா தான வீட்டுல இருக்க? நான் காலேஜ் போக கேக்கறேன். நீ ஊர் சுத்த கேக்கற.

நம்பர் 1: மரியாதையா வச்சுட்டுப் போ, நான் கெட்டவனா மாறதுக்குள்ள.

நம்பர் 2: Seriously? நீ மாறணும். நான் கெட்டவனேதான். போடா ……..

நம்பர் 1: அம்மா…இவன் ஓவரா பேசறான். வந்தேன்னு வச்சுக்க. தாங்க மாட்ட. I’m born evil…

காட்சி 2:சாருவிடமிருந்து போன். பழைய கதை பேசிக் கொண்டிருந்தார்.

சாரு: ……………அந்த டிரைவர் என்ன பண்ணினான் தெரியுமா? பெட்ரோலுக்கு பதில் டீசல் போட்டுட்டான் வண்டிக்கு. எனக்கு வேற அவசரமாக அவங்களைப் பார்க்க போக வேண்டி இருந்தது. கோபத்தோட வண்டிய எப்படியாவது வீட்டுக்கு கொண்டு போன்னு சொல்லிட்டு ஆட்டோல போயிட்டேன்.

நான்: அடடா!… அப்புறம் என்னாச்சு?

சாரு: நான் நீ நினைக்கற மாதிரி நல்லவன் இல்லமா. ரொம்ப evil. என்ன செஞ்சேன் தெரியுமா?

பதற்றதுடன் நான்: என்ன செஞ்சீங்க?

சாரு: இது வரைக்கும் வேலை செஞ்சதுக்கான பணத்தைக் கொடுத்து, அவனை வேலைய விட்டு அனுப்பிட்டேன். எப்படி?

காட்சி 3:ராம்ஜி கோபத்துடன்: வரட்டும் அவன். வாழ்க்கைலையே அவன் மறக்க முடியாதபடி இன்னிக்கு பண்ணிடறேன். என்னை யாருன்னு நினைச்சான்? எப்பேற்பட்ட மோசமானவன் நான்னு இன்னிக்கு நீ பார்க்கப் போற காயத்ரி.

அவன்: அண்ணே, ………………………………………….

ராம்ஜி: இன்னொரு தடவை இப்படி செஞ்சே தொலைச்சிடுவேன். சாப்பிட்டியா? போய் சங்கீதால நல்லா சாப்புட்டு வா…

****ஆண்டவா! தேவ கணங்களை அனுப்புவேன்னு பார்த்தா, இப்படி பூத கணங்களையா என்னைச் சுத்தி அனுப்பி விட்டுருக்கையே. நன்றி!#livingwithmen