சாரு இந்தியாவில் முதுமையை எப்படி கையாள்கிறார்கள் என கொலைவெறியுடன் எழுத , வளன் அம்பேரிக்காவில் முதுமையை எப்படி ஜாலியாக எதிர்கொள்கிறார்கள் , அவர்களை மற்றவர்கள் எப்படி டிரீட் செய்கிறார்கள் என்று எழுதினார். தொடர்ச்சியாக பெருந்தேவியின் போஸ்டும் கண்ணில் பட்டது. 92 வயதிலும் ஆக்டிவ் செக்ஸ் லைஃப் என்பது போல அவர் எழுதியிருந்தது நினைவில் வருகிறது. அதில் மட்டும்தான் கொஞ்சம் குழப்பம் நிலவுகிறது. இருவருமே 92 எனில் சாத்தியம் இல்லை. 92 – 28 எல்லாம் இங்கே விட்டு விடுங்கள் , உலகிலேயே நொக்கையாகத்தான் பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன். இது சம்மந்தமாக இன்னொரு சுவாரசிய நினைவு மனதில் எழுகிறது. ஒரு கிராமத்தில் பிரபல மருத்துவர் அவர். மனித நேயப்பண்பாளர். சமயங்களில் ஏழைகளுக்கு இலவசமாகவே வைத்தியம் பார்ப்பார். அதாவது , அவர்களே கொடுத்தாலும் . ”ஓண்ட்ட என்னா பெருச்சா இருக்குன்னு என்கிட்ட தூக்கி குட்க்க வந்துட்ட “ என்று அன்புடன் வட்டார வழக்கு கலந்து சிற்றிலக்கிய பத்திரிக்கையில் இடம்பெறும் சிறுகதையில் புழங்கும் டாக்டரை போலவே கடிந்து கொள்வார். நான் அவர் கிளினிக்கில் வேறு விஷயமாக இருந்தபோது 70 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்தார். வந்து அமர்ந்த அவர் பேச ஆரம்பித்தார்…”இந்த காலு ஒரே மாதிரி இல்ல , நடக்கும் போது நல்லாத்தான் இருக்கு , திடீர்னு வலிக்குது. ஒக்காந்து இருக்கும்போது கூட நல்லா இருக்கு , ஆனா சப்ளாங்கால் போட்டு ஒக்காந்தா சுரீர்னு இழுக்குது, படுத்துட்டு இருக்கும்போதும் கொரக்களி வருது , ஒரு பக்கமா நீட்டி ஒக்காந்தா உயிர் வலி வலிக்குது “ இதைப்போல ஐந்து நிமிடங்கள் அவர் கால் பிரச்சனையை இன்றைய இளம் நங்கை தன் பாய் ஃபிரண்டை குறை கூறுவது போல சொல்லிக்கொண்டு இருந்தார். நடுவில் குறுக்கிட்ட டாக்டர் , “ஒங்க வயசு என்னா ?””70க்கு மேல இருக்கும்”.
”70 வயசுல எல்லாம் உயிரோட இருக்குறதே பெரிய விஷயம். கால் வலிக்குதாம் பூலு வலிக்குதாம் “
டாக்டர் அறையில் நான் உட்பட இன்னும் சிலர் இருந்தோம். எல்லோரும் கொல்லென்று சிரித்தோம். 70 வயசு பார்ட்டியும் சிரித்தார். ஆனால் அந்தச் சிரிப்பில் ஒரு சதவீதம் அளவுக்கு அடிபட்ட சோகம் இருந்ததை அப்போது கவனித்தது இப்போது உறைக்கிறது.
டாக்டர் தொடர்ந்தார் ….”70 வயசுக்கு மேல எல்லாந்தான் வலிக்கும்.நாமதான் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போகணும். இதுக்குல்லாம் மருந்து இல்ல . இனிமே கை வலிக்குது , கால் வலிக்குது , காது கொடையிதுன்னு இந்தப் பக்கம் வரக்கூடாது புரிஞ்சிதா ?” என்றார். அந்த 70 வயசு ஆசாமியும் சிரித்தபடியே தலையாட்டிவிட்டு வெளியே போனார்.
”வயசாச்சின்னா , எங்க போய் பொழுது போக்கறதுன்னு தெரியாம டாக்டர்கிட்ட வந்துடறாங்க “ என்று வெடிச்சிரிப்பு சிரித்தார் டாக்டர். நாங்களும். அந்த 70 + ஆளிடம் பணம் வாங்காமல் வைத்தியமும் பார்க்காமல் அனுப்பியதால் அந்த டாக்டருக்கு பெருமைதான் அந்த ஊரில் .
”தேவையில்லாம வைத்தியம் பாக்க மாட்டார் , வெட்டியா ஊசி மருந்து எழுதி காசு புடுங்க மாட்டார் “ என்று நல்ல பெயர். அந்த டாக்டரை குறை சொல்லவில்லை. அவர் , அவரளவிற்கு நியாயமாக செயல்படுவதாகவே நினைத்து செயல்பட்டிருக்கிறார். ஊரிலும் அவர் செய்கை பாராட்டப்படுவதாகவே இருந்திருக்கிறது. எனக்குமே அப்போது அவர் செய்கை சரியென்றே , இன்னும் கேட்டால் மிகச் சரியென்றே பட்டது. இதுதான் நம் சமூக அவலம். நாமாக ஒரு பொது அறத்தை உருவாக்குகிறோம். அதனால் பாதிக்கப்படுபவர்களைப் பற்றியும் நமக்குக் கவலையில்லை. பாதிக்கப்படுபவரையும் அந்த பொது அறம் விளைவிக்கும் கொண்டாட்டம் மற்றும் மகிழ்ச்சியில் பங்குபெறச் செய்கிறோம். டாக்டர் என்றால் , போனாலே ஊசி போடுவார் காசு வாங்குவார் என்ற பொது பிம்பத்துக்கு மாற்றாக அதை விட மட்டமான ஒன்றை உருவாக்கி நாம் கூத்தாடிக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். கால் வலிக்குதுன்னு போனவருக்கே இந்த கதி என்றால் பூல் எந்திரிக்கலைன்னு எவனாவது 50 வயசுக்கு மேல போக தைரியம் வருமா ?அதனால்தான் கிழவர்கள் 70 , 80 வயதிலும் சிறுமிகளை அப்யூஸ் செய்துகொண்டிருக்கிறார்கள்.
கிழவிகள் சிறுவர்களை அப்யூஸ் செய்வதில்லை (பெரும்பாலும்) . அதிக பட்சம் கிழவிகள் கிராமங்களில் சிறுவர்களின் குஞ்சை பிடித்து என்னாடா இது ”கொட்டைப் பாக்கு “என்று சொல்லி கிள்ளுவார்கள். அது அப்யூஸ் அல்ல. வெளாட்டு.
இதற்கான பயாலஜிக்கல் மானுடவியல் காரணங்களை மோடிஜி அவர்கள் அரசு சத்குரு , நந்தன் நீலேகனி , ரகுராம் ராஜன் மற்றும் நிதின் கட்காரி கொண்ட குழுவை வைத்து ஆராய்ந்து வெள்ளை அறிக்கை சமர்பிக்கட்டும்.