சொற்கடிகை – 3

சொற்கடிகை is coming so well.. i am looking forward so much for this.. it reminds of your articles in AV. Waiting every week to read. BTW what is fascinating is how you are switching between Aurangazeb and this… rendum vera mood and writing style. You are amazing…

இன்று காலை எழுந்ததும் வாட்ஸப்பில் பார்த்த செய்தி இது.  அன்னபூர்ணி அனுப்பியது.

பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது அது.  25 ஆண்டுகள் இருக்கலாம்.  அப்போது நான் மாரிமுத்து என்று அன்புடன் அழைக்கும் யூமா வாசுகியை சந்திக்க அவ்வப்போது பழவந்தாங்கல் போவேன்.  மின்சார ரயிலில்தான் போக வேண்டும்.  அவரைப் பார்த்து விட்டுத் திரும்பும்போது பழவந்தாங்கல் ஸ்டேஷனிலேயே அமர்ந்து கவிதைகள் எழுதுவதுண்டு.  காலை நேரத்தின் கூட்ட நெருக்கடியில் கூட அங்கே உள்ள சிமெண்ட் பெஞ்ச்சில் அமர்ந்து எழுதியிருக்கிறேன்.  ஒருமுறை அப்படி நான் எழுதுவதைப் பார்த்து விட்டு அந்தப் பக்கம் வந்த வண்ணநிலவன் வியப்புடன் கேட்டதும் ஞாபகம் இருக்கிறது.  அப்போது வண்ணநிலவன், பெருமாள் முருகன் எல்லாம் பழவந்தாங்கலில்தான் இருந்தார்கள்.  ஓரிரு முறை பெருமாள் முருகனை யூமாவுடன் சென்று அவரது குடிலில் பார்த்திருக்கிறேன்.  அப்போது அவர் ஆய்வு மாணவராக இருந்ததாக ஞாபகம். 

அப்படி எந்த நேரத்திலும் எழுதுவதற்காகவே எப்போதும் என் ஜேபியில் சிறிய நோட்டுப் புத்தகம் மற்றும் பேனா அல்லது பென்ஸில் வைத்திருப்பது அப்போதைய வழக்கம். 

இப்போதும் எந்த நிலையிலும் என்னால் எழுத முடியும்.  புறவுலகக் கூச்சல் என்னை ஒருபோதும் பாதிப்பதில்லை.  அகக் கூச்சலும் அப்படியே.  அகக் கூச்சல் பற்றித்தான் சொல்ல வேண்டும்.  சிலரைப் பார்த்திருக்கிறேன்.  கோபம் வந்தால் இரண்டு தினங்களுக்கு டஞ்ஜனாக இருப்பார்கள்.  யார் மீதோ கோபம், ஆனால் நம்மைப் பார்த்தும் முறைப்பார்கள்.  நம் மீது கோபம் இல்லை என்பதே மூன்றாம் நாள்தான் தெரியும்.  கிட்டத்தட்ட 99 சதவிகித பெண்கள் அப்படித்தான்.  மிகச் சிலருக்கு அந்தக் கோபம் சில மணி நேரங்கள் மட்டுமே நீடிப்பதுண்டு.  ஆண்களுக்கு அதிக நேரம் தாங்காது.  (படுக்கையில் மட்டும் அல்ல, எங்குமே அப்படித்தான் போல!) 

கழுத்து நரம்பு புடைக்க, கைகால்கள் தடதடவென ஆட, கோபத்தில் இருக்கும்போது கூட – அப்படியெல்லாம் எனக்கு ஆவதில்லை என்றாலும் ஒரு உதாரணத்துக்குச் சொல்கிறேன் – அந்த மனநிலையைச் சட்டென்று மாற்றிக் கொண்டு என்னால் எழுத்து நிலைக்குப் போக முடியும். Mode என்று சொல்கிறோம் இல்லையா, அதுதான்.  டக் டக்கென்று மாற்றிக் கொள்ளலாம்.  ஸ்விட்ச் போடுவது போலத்தான்.  என்னை யாருமே மூட் ஸ்விங்கில் பார்த்திருக்கவே மாட்டார்கள்.  அப்படி நான் இருந்ததே இல்லை.  அதற்காக எனக்குக் கோபம் வராது என்றெல்லாம் இல்லை.  வரும்.  அது பாட்டுக்கு வரும், போகும்.  அதற்கும் மற்ற விஷயங்களுக்கும் சம்பந்தம் இல்லை. 

எனக்கு எத்தனையோ வசை கடிதங்கள் வருகின்றன.  கோபம் வருவதில்லை என்று சொன்னால் அதில் ஒன்றுமில்லை.  மாறாக, அப்படி எழுதுபவர்கள் மீது ஐயோ பாவம் என்று எனக்குப் பரிவு உணர்ச்சி உண்டாகிறது.  எனக்குப் பிரியமானவர்கள் என்னை அவமானப்படுத்தும் போது கோபம் வரும்.  ஆனால் அவர்கள் மீதும் பரிதாபமே கொள்ளுவேன்.  ஏனென்றால், ஒருவர் மீது நீங்கள் கோபப்படும்போது அல்லது அவரை அவமதிக்கும்போது உங்கள் உடல் மற்றும் மனநலம் பாதிப்பு அடைகிறது.  உங்கள் ரத்த அழுத்தத்திலிருந்தே இதைத் தெரிந்து கொள்ளலாம்.  ஹட யோகம் அறிந்தவர்கள் இந்த நிலைகளிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளலாம்.  தாமரை இலைத் தண்ணீர் என்கிறோம் இல்லையா?  அது ஒருவித numbness.  அதனால்தான் யோகிகளால் மணிக்கணக்கில் கலவியில் ஈடுபட முடிகிறது. 

அதனால் ஔரங்கசீப் நிலையிலிருந்து சொற்கடிகை நிலைக்கு மாறுவது ஒரு சாதாரண விஷயம்தான்.    

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரம்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai