பீஸ்ட் பற்றிய பதிவில் லும்பன் என ஒரு வார்த்தையை குறிப்பிட்டு இருந்தேன். ஜகன் வெங்கடேஷ் என்ற நண்பர் ஒரு கமெண்ட் இட்டு இருந்தார். அவர் கமெண்ட் :- அது லும்பன் இல்லை “லம்பென்”lumpenproletariat – மார்க்சிய சிந்தனையில் மிகவும் இழிவான சொற்களில் ஒன்றாகும். மீதி கூகுள் …இந்த தமிழ் எழுத்தாளர்களால் (அதாவது தமிழ்ல எழுதறவங்க இலக்கியவாதியில்லை )நாம படற கஷ்டம் இருக்கே
ஊபருக்கு பதிலா உபேர்னு கத்துகொடுப்பாய்ங்க..நாம அசிங்கப்பட்டு கஷ்டப்பட்டு அவமானப்பட்டு அத மாத்திக்கனும்அய்யா அந்த audio pronunciation facilities எல்லாம் உபயோகிங்க அய்யா….
***
இப்போது புது கோஷ்டி ஒன்று உருவாகியிருக்கிறது. கூகிளுக்கும் யூ டியூபுக்கும் பிறந்த குழந்தைகள். உன் அப்பா பெயர் லொங்கு ராஜா என கூகிள் சொல்லி விட்டால் இந்த கோஷ்டியினர் அம்மாவிடம் ஓடி என் அப்பா பெயர் லொங்கு ராஜா தானே ? ஏன் சண்முகம்னு பொய் சொன்ன என மல்லுக்கு நிற்பர் . இன்ஷியலையும் எஸ் இல் இருந்து எல்க்கு மாற்றிக்கொள்வர். நான் இந்த ப்ரொனவுன்ஷேஷனில் எல்லாம் எக்ஸ்பர்ட் கிடையாது, ஆனால் லெஜண்டுகளை பின்பற்றுவேன்.லெஜண்டுகளை கூகிளால் அடிக்க மாட்டேன். இதற்கு அத்தாரிட்டியான சாருவுக்கு போன் போட்டு விஷயத்தைச் சொன்னேன். அவர் இந்த கமெண்டை படித்துப் பார்த்து கடுப்பாகி விட்டார். மாஸ்டர்ஸ் கிட்ட எல்லாம் துங்கிடிப் பசங்க வெளாடக்கூடாது சீனி என கடுப்பாகச் சொன்னார். தொடர்ந்து சில நயமான வசைகளை இறக்கினார். அதற்கு லொங்கி ராஜாவே தேவலாம் போல இருந்தது.
ஏன் இவ்வளவு கடுப்பு என்றால் ஜஸ்ட் கூகிளில் ஆடியோ உச்சரிப்பைக் கேட்டு விட்டு தனக்கு எல்லாம் தெரிந்தது போல எவ்வளவு திமிரான தெனாவட்டான கமெண்ட் பாருங்கள். ஏன் தெனாவட்டு என்கிறேன் என்றால் , தமிழ் எழுத்தாளர்கள் மீது சேற்றை அள்ளி வீசிவிட்டு செல்லும் திமிர் எங்கிருந்து வருகிறது? கூகிளில் ஆடியோ உச்சரிப்பு கேட்டு விட்டாரம். இதுதான் இவரின் தகுதி !
சாரு சொன்னதை தொகுத்து சொல்கிறேன்….கூகிள் எல்லாம் தோன்றாத காலத்துக்கு முன் செல்வோம். லும்பன் என்பது ஜெர்மன் வார்த்தை. அதை ஆங்கிலம் அப்படியே ஸ்வீகரித்துக்கொண்டது. எப்படி தமிழ் கட்டுமரத்தை கட்டமரான் என எடுத்துக்கொண்டதோ , அது போல. அவர்கள் காந்தியையே கேண்டி என சொல்லுவார்கள். அடுத்து வரும் தலைமுறை அதை ஆடியோ உச்சரிப்பில் கூகிள் மூலம் கேட்டு விட்டு கேண்டி கேண்டி என அவுத்துப்போட்டு ஆடுவார்கள். இன்னும் கொஞ்ச நாளில் ஹௌ டூ ப்ரொனௌன்ஸ் லைக் எம் ஜி ஆர் என்றெல்லாம் கூகிள் சேவை அறிமுகபப்டுத்தப்படலாம். அப்போது புந்தா மவன் பிரபலமாகி அது மருவி பந்தா மகன் என்று மாறி , கடையிசில் “அது” பந்தா வாக கூட ஆகி விடும். உன் பந்தாவ என்கிட்ட காட்ட மாட்டியாடீ என ஆண்கள் சாட்டில் தெறிக்க விட்டுக்கொண்டு இருக்கக் கூடும். மகுடேஸ்வரன் வழித்தோன்றல்கள் அப்போது “அது” பந்தா இல்லை….அது புந்தாவில் இருந்து பந்தா ஆகியது …அதற்கு முன் புந்த என்பது புந்த அல்ல …அது … ….என ஆரம்பித்து வகுப்பெடுக்க வேண்டியிருக்கும்.
லும்பன் என்ற வார்த்தையை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் , மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிஞர்கள். அவர்கள் லும்பன் என்றுதான் அறிமுகப்படுத்தினார்கள். இவர்கள் ரஷ்யாவுக்கு சென்று வந்தவர்கள். அப்போதிலிருந்து இந்திய அறிவு ஜீவிகள் , எழுத்தாளர்கள் என அனைவரும் லும்பன் என்றுதான் எழுதியும் பேசியும் வருகிறார்கள். இங்கே இந்தியாவில் அப்படி சொன்னால்தான் புரியும் . அது ஒரு மந்திர வார்த்தை போல நிலைப்பெற்று விட்டது.
அதே கூகிளில் சென்று how to pronounce lumpen in German என தேடிப் பார்க்கவும். லும்பன் என்றுதான் உச்சரிப்பு வருகிறது. கட்டுமரத்தை ஆங்கிலேயர்கள் கட்டமரான் என்று சொல்வதால் கட்டுமரம் கட்டமரான் ஆகிவிடுமா ? இந்த வார்த்தையை அறிமுகப்படுத்திய மார்க்ஸிய அறிஞர்கள் , இதுவரை லும்பன் என்று எழுதியும் உச்சரித்தும் வந்த இந்திய இண்டெலக்சுவல்கள் , எழுத்தாளர்கள் எல்லாம் கேனையர்கள் , ஒரு முறை கூகிளில் உச்சரிப்பு கேட்ட ஒரு இவருக்கு கொம்பு முளைத்து அறிஞர் ஆகி விட்டார். உடனே எழுத்தாளர்களை நக்கலடிக்கும் திமிர் வந்து விடுகிறது.
சாரு அத்தோடு விட வில்லை, ஜெர்மனில் இருக்கும் தன் நண்பருக்கு போனைப்போட்டார். அந்த நண்பர் தன் தோழிக்கு போனை போட்டார். அந்த தோழி லும்பனை எப்படி உச்சரிப்பது என ரெகார்ட் செய்து அனுப்பினார். அதை சாரு எனக்கு ஃபார்வேர்ட் செய்தார். அதோடு விடாமல் லும்பன் பற்றி பல வரலாற்று தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த அளவில் நான் அந்த கமெண்ட் போட்ட நண்பருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இவை எல்லாவற்றையும் விட்டு விடுவோம். இந்தியாவில் இந்த வார்த்தை லும்பன் என்று அறிமுகப்பட்டு , லும்பன் என்றே புழக்கத்தில் இருக்கிறது. லும்பன் என்றால் தான் தெரியும். லம்பென் என்றால் ஒரு மசுரும் யாருக்கும் புரியாது. ஆக்சுவலி அமெரிக்காவில் போய் லம்பென் என்றாலும் பலருக்கும் புரியாது. ஏதோ பிரேசியர் பிராண்ட் என நினைத்துக்கொள்வார்கள்.
கூகிள் என்பது ஒரு டூல். ஸ்குரூ டிரைவர் கையில் வைத்திருப்பவன் எல்லாம் எஞ்சினியர் இல்லை என கூறிக்கொண்டு….சாரு அனுப்பிய ஜெர்மன் தோழியின் ஆடியோ ஃபைலை இணைத்திருக்கிறேன். ஆடியோ ஃபைலை ஃபேஸ்புக்கில் இணைக்க முடியாது என்பதால் ஜாலியாக ஒரு விடியோவை போட்டிருக்கிறேன்.
சரி லும்பன் என்றால் என்ன ?
a member of the crude and uneducated lowest class of society.
Cambridge dictionary : used to describe people who are not clever or well educated, and who are not interested in changing or improving their situation.
சரி இப்போது யார் லும்பன் ?
https://www.facebook.com/100001476846563/videos/1282595162227502