இன்றைய மூன்றாவது கவிதை: காடு சுடும் மணம்

வீட்டுக்குப் பின்னே சுடுகாடு

சிறு வயதில் தெரிந்த மரண மணம் 

மழைக் காலத்தில் அதிகமுமுண்டு

முதல் மழை விழுந்த மண் 

அம்மா சாணி மிதித்து றாட்டி தட்டும் மணம்

கண்ணில் விழும் தூசைப் போக்க

பக்கத்து வீட்டு அத்தாச்சி பீய்ச்சி அடிக்கும்

முலைப்பால் 

அத்தையின் வாய் 

அம்மாவின் கை 

நைனாவின் ரத்தினம் பொடி 

கோழிப் பீ

தாழம்பூ தைத்த சடை போட்டு வரும்

அக்காக்களின் மணம்

தர்ஹாவின் கொமஞ்சான் 

எஜமானின் அருள் 

மனாராக்களில் வாசம் செய்யும் புறாக்களின் மணம்

சில்லடியின் மணல் 

கடல் 

சவுக்குத் தோப்பு 

கூடை கூடையாய் மல்லிப்பூ வைத்துக் கொண்டை போடும்

என் மாமன் மகள் ஜெயா மணம்

சிவன் கோவில் வவ்வால் 

துர்க்கை 

பெருமாள் கோவில் துளசி 

சிவன் குளத்துப் பாசி 

பியூசி ஃபெயிலாகி 

கவியாகும் கனவில் அடித்த 

கஞ்ஜா மணம் அபீன் மணம்

பதினேழு வயதில் கண்ட வேசியின் அக்குள் 

எதிர் வீட்டுக குமாரியின் முத்த மணம்

எழுத முடியாத ஒலியெழுப்பியபடி

துணை தேடி வரும் செம்மறியாட்டின் 

மொச்சை மணம்

தாய்லாந்து வேசிகளின் விதவிதமான 

செயற்கை மணம்

மணம் மணம் மணம் 

மேலும் மணம்

அருகில் வராதே

உன் மணம் இச்சையைக் கிளப்புகிறது 

என்று சொன்ன காதல்களின்

யோனி மணம்

தில்லியில் கண்ட பஞ்சாபிகளின்

லிப்ஸ்டிக் மணம்

கேரளத்துக் கேச மணம்

போகியின் போது எரிக்கும் டயர் 

சேர்ந்து கொலைத் தொழில் புரிந்த போது

பார்த்த குருதி 

வாழ்நாள் பூராவும் தொடர்ந்து வரும் மீன் 

மாலை போட்ட போது

வத்தி மணம் கல்பூர மணம் மஞ்சள் மணம்

அக்னி மணம்

ஒரே பக்தி மணம்

தர்ஸனம் முடிந்த வெளிவந்து

கண்ட சாக்கடை மணம்

ஞான மணம்

துறவியின் சொல் மணம்

மலரைப் பறித்து முகர்ந்து பார்க்கும்

மூட மனிதரின் மணம்

நீ 
மணம்

நான் 
மணம்

இப்பூவுலகில் 

அதிகமுமுண்டாம்

மணம்

இப்பூவுலகில் 

அதிகமுமுண்டாம்

மணம்