தமிழ் சினிமா

எல்லோரும் சொல்கிறார்களே என்று சாணி காயிதம் என்று ஒரு படத்தைப் பார்க்க முயன்றேன். மூணு நிமிஷத்துக்கு மேல் பார்க்க முடியவில்லை. ஆனால் தார் படத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க முடிந்தது.

ஏன் மூணு நிமிஷம் கூடத் தாக்குப் பிடிக்க முடியவில்லை என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஏதோ ஒன்று அரைவேக்காட்டுத்தனமாக உள்ளது. அந்தக் காலத்து ஜேஜே சில குறிப்புகள் இப்படித்தான் எனக்கு ஃபேக் என்று தோன்றியது. இன்று அதன் இடமே தெரியவில்லை. அம்மாதிரி ஃபேக் படங்களோ என்றும் சந்தேகமாக உள்ளது.