நான் தான் ஔரங்ஸேப்… : நேச மித்ரன்

கற்பிதங்களின் பலிமேடை மீது மரச்சுத்தியலால் தட்டுதல்

இந்த பூமியின் காலம் அட்சரேகைகளாலும் தீர்க்கரேகைகளாலும் அளக்கப்படுகிறது என்றால் வரலாறு என்பது ரத்தத்தின் மீதும் முத்தத்தின் மீதும் புனையப்பட்ட கதைகளால் உருவானது. புகழப்பட்ட அரசர்கள் தான் தெய்வங்கள் ஆக்கப்படார்கள். எதிர்திசையில் இகழப்பட்டவர்கள் அசுரர்கள் ஆகிறார்கள். அப்படி பாடப் புத்தகங்கள் வழி கிட்டத்தட்ட ஓர் அசுரனாக கட்டமைக்கப்பட்ட பிம்பம் தான் அவுரங்கசீப். ஒரே மொழி ஒரே மதம் மற்ற மதங்கள் யாவும் கீழானவைஎன்று அதிகார பீடம் அவர்களின் வழிபாட்டுத் தலங்களையும் வாழிடங்களையும் இடித்து அரச கோட்டைகள் கட்டுகிற ஒரு இருண்ட காலத்தில் மற்ற எல்லா கதாசிரியர்களும் கதை சொல்லிகளும்இதிகாசங்களை மறுபுனைவு செய்து மீளவும் எழுதி பொருள் செய்யும் காலத்தில் ஓர் அரக்கனாக பிம்பம் எழுப்பப்பட்ட ஓர் அரசனின் வாழ்வை வரலாற்றின் கல்லறைகளில் இருந்து தார்மீக அறத்துடன் சரியான தரவுகளில் இருந்து நாவலாக எழுதியிருக்கிறார் சாரு நிவேதிதா.பொதுவாக வரலாற்று புனைவுகள் அலங்காரமான சொற்கள் மிகை வர்ணனைகள் நீளமான வாக்கியங்கள் கொண்டு எழுதப்படும், ஆனால் பாரமற்ற வாக்கியங்கள். எளிய சொற்றொடர்கள் மூலம் நேர்மையான பார்வையுடன் மிக அணுக்கமான சொல்லல் முறை வழியே ஒரு எதிர் அரசியல் பேசும் படைப்பை தந்திருக்கிறார் ஆசிரியர். ஒரு காலத்திற்கு எதிராக ஒரு நல்ல கலைஞனின் பிரக்ஞை இப்படித்தான் வேலை செய்யும். நாளைக்கே சாரு ஆண்டாள் குறித்தும் எழுதுவார் .அதிலும் அவர் நேர்மையாய் இருப்பார் என்றே தோன்றுகிறது. இது என்னுடைய சிறு அறிமுகம் எனக் கொள்க. எனக்கு குரான் பரிசளித்த நண்பனுக்கு ஒன்று ,வெண்முரசு பரிசளித்த நண்பனுக்கு ஒன்று , சினுவா ஆச்சிபியின் நூலைபரிசளித்த நண்பனுக்கு ஒன்று என மூன்று பிரதிகள் இவை .

முன்முடிபுகள் இல்லாமல் எழுத்தை நேசிக்கும் என் நண்பர்களுக்கு இந்தப் புத்தகத்தை பரிந்துரைக்கிறேன்.பிரியத்திற்குரிய Sriram Somasunderam .அன்பு நேச மித்ரன்

முன்பதிவுக்கு

https://tinyurl.com/naanthaanaurangazeb