ஹம்மரும் ஜகுவாரும்…

நான்தான் ஔரங்ஸேப்… நாவலின் சிறப்புப் பதிப்பு வெளியீட்டுத் திட்டத்தில் பத்தாயிரம் ரூபாய் பிரிவில் சுமார் இருபது பேரும், ஐம்பதாயிரம் பிரிவில் நான்கு பேரும், ஐந்து லட்சம் பிரிவில் ஒருவரும் பணம் அனுப்பியிருக்கிறார்கள். ஐம்பதாயிரம் அனுப்பிய ஒரு நண்பர் தன் பெயரைக் குறிப்பிடவில்லை.  பெயரைக் குறிப்பிட்டால் நல்லது.  இவரைத் தவிர மற்ற அத்தனை பேரும் நீண்ட காலமாக என்னோடு தொடர்பில் இருக்கும் நண்பர்கள்.  புதிதாக ஒருவர் கூட பணம் அனுப்பி இந்த சிறப்புப் பதிப்புத் திட்டத்தில் இணையவில்லை என்பது எனக்குப் பெரிய ஆச்சரியம்.  திரும்பத் திரும்ப என் நண்பர்கள் மட்டுமே என் பயணங்களுக்குப் பண உதவி செய்து வருகிறார்கள்.

என் இணைய தளத்தில் நான் எழுதுவதை பல செல்வந்தர்களும் தொழிலதிபர்களும் சினிமாத் துறையினரும் வாசிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும்.  அவர்களெல்லாம் ஏன் ஒரு ரூபாய் கூட அனுப்புவதில்லை என்று யோசித்துப் பார்க்கிறேன்.  என்னதான் பணத்தில் கொழித்தாலும் அவர்கள் ஒரு பிச்சைக்காரனின் மனோபாவத்தோடுதான் வாழ்கிறார்கள் என்று தோன்றுகிறது.  பைசா பைசாவாகப் பிச்சை எடுப்பவன்தான் பைசாவை செலவே செய்யாமல் முடிந்து வைத்துக் கொண்டிருப்பான்.  ஆனால் ஆன்மீகவாதிகளுக்கு என்றால் லட்சம் லட்சமாகக் கொட்டிக் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். 

போன வாரம் ஒரு கோடீஸ்வரர் நான் ஒரு ஹம்மர் கார் வாங்கியிருக்கிறேன், உங்களை லஞ்சுக்கு அழைத்துப் போகிறேன் என்றார்.  போனேன்.  ஐந்து நட்சத்திர ஓட்டல்.  வைன் சாப்பிடச் சொன்னார்.  வேண்டாம் என மறுத்து விட்டேன்.  இரண்டு பேர் சாப்பிட ஏழாயிரம் ரூபாய் ஆனது.  வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டார். 

அவரிடம் நான்தான் ஔரங்ஸேப்… சிறப்புப் பிரதி பற்றியும் என் சீலே பயணம் பற்றியும் ஆவணப் படம் பற்றியும் சொன்னேன்.  ஆவன செய்கிறேன் என்றார்.  அதற்குப் பிறகு அவரிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை.  ஆனால் தினந்தோறும் காலையில் தவறாமல் குட்மார்னிங் மெஸேஜ் அனுப்பி விடுகிறார்.  நானும் தவறாமல் சிறப்புப் பிரதி பற்றிய கட்டண விவரத்தை அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.

இனிமேல் இப்படி ஹம்மர் வாங்கியிருக்கிறேன், ஜகுவார் வாங்கியிருக்கிறேன், வாருங்கள், லஞ்சுக்குப் போகலாம் என அழைத்தால் ஒரு லட்சம் தாருங்கள், வருகிறேன் என்று சொல்லலாம் என்று இருக்கிறேன்.  (இரண்டு கார்களுமே ஒரு கோடி ரூபாய் விலை என்று யூகிக்கிறேன்…)

நண்பர்களே, முடிந்தவரை பத்தாயிரம் ரூபாய்க்கான சிறப்புப் பதிவில் இணைந்து கொள்ளுங்கள் என அழைக்கிறேன்.  வரும் செவ்வாய்க்கிழமை செப்பனிட்ட நாவல் பிரதியை பதிப்பகத்திடம் கொடுத்து விடுவேன். 

பணம் அனுப்புவதற்கான விவரம் ப்ளாகில் கிடைக்கும்.  கேட்வே இருக்கும்.  ரேஸர் பே மூலம் அனுப்பலாம்.  இல்லாவிட்டால் என் ஆக்ஸிஸ் வங்கிக்கு அனுப்பலாம்.

Axis bank account number 911010057338057

Account holder: K. Arivazhagan

Branch: Radhakrishnan road Mylapore Chennai 4

IFSC     UTIB0000006