(பின்வரும் கதை அராத்து ஃபேஸ்புக்கில் எழுதியது. எனக்கும் இதேபோல் தினந்தோறும் நடப்பதால் இதை நான் எழுதியதாகவும் கொள்ளலாம். கன்ஸல்டிங்க் போன்ற பரதேச பாஷைகளுக்கு மட்டும் தமிழில் நீங்களாகவே போட்டுக் கொள்ளவும். கன்ஸல்டிங்க் என்பதற்கு நான் ஆலோசனை என்று எழுதியிருப்பேன். – சாரு)
ஒரு ஃபேஸ்புக் நண்பர் புத்தகத் திருவிழாவில் என்னை சந்தித்து நம்பர் வாங்கிக்கொண்டார். தொழில் ரீதியாக கன்ஸல்டிங்க் வேணும் என்றார். நான்கைந்து வாட்ஸப் மெசேஜ் , இரண்டொரு கால் . ஒரு நாள் தன் உதவியாளர்கள் இரண்டு பேருடன் என் அலுவலகம் வந்தார். ஒன்றரை மணி நேரம் என் வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு என் அனுபவத்தில் கற்றதை எல்லாம் அவர் செய்யும் தொழிலுக்கு ஏற்றது போல விளக்கினேன். சந்திப்புக்கு வரும் வரை அவரும் எவ்வளவு ஃபீஸ் என கேட்கவில்லை. நானும் சொல்லவில்லை. கன்ஸல்டிங்க் முடிந்ததும் என்ன செய்யலாம் ?மிக்க நன்றி என சொல்லி விட்டு போகலாம். நான் என் ஃபீஸ் என முன்கூட்டி சொல்லாததால் எதிர்பார்க்க வில்லை, அதனால் கேட்டிருக்கவும் மாட்டேன். அல்லது நோயாளிக்கு கொடுப்பது போல 300 கிராம் ஆப்பிள் + மில்க் பிக்கி + 100 கிராம் மிக்சர் கொடுத்து விட்டு காமன் மேன் போல கெத்தாக போகலாம்.இவை எதையும் செய்யவில்லை நண்பர். “நெறைய பேர் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க ,உங்க பிஸி ஷெட்யூலில் எங்களுக்காக ரொம்ப நேரம் ஒதுக்கி கன்ஸல்டிங்க் குடுத்துருக்கீங்க , உங்க ஃபீஸ் எவ்ளோ சொல்லுங்க ” என்றார். பின்னால் திரும்பிப் பார்த்து தன் உதவியாளர்களிடம் “சொன்னன் இல்ல , சார் ரொம்ப பிஸி ” என்றார்.இதன் பிறகு நடந்ததுதான் மிகவும் நுட்பமானது.”நான் இத பிஸினஸா பண்றது இல்ல , ஃபிரண்ட்ஷிப்பா கேட்டிங்க , பணம் எதிர்பார்த்து பண்ணல , நீங்க குடுக்கணும்னு விருப்பப்பட்டா நீஙக்ளே எவ்ளோ வேணா டிரான்ஸ்பர் பண்ணிடுங்க ” – இதுதான் நான் சொல்ல நினைத்தது. சொல்லவும் ஆரம்பித்தேன்.”நான் இத பிஸினஸா பண்றது இல்ல , ஃபிரண்ட்ஷிப் ….” இதை சொல்லிக்கொண்டிருக்கும்போது இடை புகுந்தார். பெருத்த சத்தத்துடன் “சார் ஃபிரண்ட்ஷிப் வேற, பிஸினஸ் வேற. நீங்க குடுத்த கன்ஸல்டிங்குக்கு கண்டிப்பா பே பண்ணியே ஆகணும்…” என்று சொல்லிக்கொண்டே எழுந்து போய் விட்டார். —-கதை முற்றும். இது நடந்து 2 வாரங்கள் இருக்கலாம். இதுவரை பணம் ஏதும் அனுப்பவில்லை.சந்திப்பிற்காக தொடர்ந்து மெசேஜ் அனுப்பிக்கொண்டு இருந்தவர் அன்றோடு தொடர்பை நிறுத்தியும் விட்டார். முன்பே சொன்னது போல சும்மா போயிருந்தால் இதை நான் அப்போதே மறந்திருப்பேன். இவர்கள் எல்லாம் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்? தன்னை பெரும் புத்திசாலியாகவும் அடுத்தவர்களை கேனபுண்டைகள் என்றுமா ? இதற்கு பேர்தான் வாயால் வடை சுடுவது. பிசினஸ் என்பது அல்ப புத்தியில் வளராது. இதை படித்து விட்டு அந்த நண்பர் பணம் அனுப்பினால், என் கோபம் பலமடங்காகும் என்பதாவது அவருக்குப் புரியுமா என்பது சந்தேகமாக இருக்கிறது. பணத்தை ஹேண்டில் செய்வது ரொம்ப சுலபம். நீங்கள் யாருக்காவது பணம் கொடுக்க வேண்டும் என்றால் கொடுத்து விட வேண்டியதுதான் அந்த சுலபமான வழி. வாயால் பணத்தை கொடுக்க முடியாது. வாயால் பேசி பேசி வாரிசு உருவாக்குவீர்களா ? மனைவி தொடப்பக்கட்டையால் அடிக்க மாட்டாள் ?