மலக்கரைசல்

ஒரு காலத்தில் மலத்தைக் கரைத்து தலித்துகளின் வாயில் ஊற்றுவார்களாம். சில ஆண்டுகளுக்கு முன்பு கூட அப்படி நடந்த சம்பவத்தை நாம் அறிந்தோம்.

இலக்கியத்திலும் அப்படி அவ்வப்போது நடப்பதுண்டு.

ராசேந்திர சோழனின் இசைவு என்ற கதை அப்படிப்பட்ட மலக் கரைசல்தான்.

அம்மா வந்தாள் நாவலில் மகன் தன் வேத பாடத்தை முடித்து விட்டு பல ஆண்டுகள் கழித்துத் தன் வீட்டுக்கு வருவான். அங்கே ஊஞ்சலில் ஒரு மாமா ஆடிக் கொண்டிருப்பார். மாமா என்பான். டேய் உன் தம்பிடா என்பாள் சகோதரி.

புரிகிறதா? அம்மா வேறு ஒருவனுடன் படுத்துப் பெற்ற குழந்தை.

இப்படியெல்லாம் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே எழுதி முடித்தாகி விட்டது.

இசைவு கதையை என்னுடைய இருபத்தைந்து வயது தோழியிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னேன்.

எவனோ ஒரு சின்னப் பயல் எழுதத் தெரியாமல் எழுதியிருக்கிறான் என்றாள்.

சமகால இலக்கியம் பயின்றவள்.

அஸ்வகோஷின் சரித்திரத்தைச் சொன்னேன். இராசேந்திர சோழன்.

இப்படி ஒரு கதையை நான் எழுதினால் என்னைக் கொன்று விடுங்கள்.

அவமானமாக இருக்கிறது.

இராசேந்திர சோழனின் சிறுகதைத் தொகுப்பு க்ரியாவில் வந்தது. க்ரியாவில் வந்தால் நோபல் பரிசு பெற்றது போல.

இந்தக் கதை அவமானமாக இருக்கிறது. ஏனென்றால், இருபத்தைந்து வயது இளைஞர்கள் இதை அமெச்சூரிஷாக இருப்பதாகச் சொன்னார்கள்.

எனக்கு மலத்தைக் கரைத்து என் வாயில் ஊற்றியது போல் இருந்தது. கேவலம். அதன் உள்ளடக்கத்துக்காக அல்ல. அதன் அமெச்சூரிஷ் தன்மைக்காக.