கொஞ்ச நேரத்துக்கு முன்னால் எனக்கு ஒரு மாணவரிடமிருந்து ஒரு வாட்ஸப் செய்தி வந்தது. கையெழுத்திட்ட நான்தான் ஔரங்ஸேப் கிடைத்தது என்ற சந்தோஷ செய்தியைப் பகிர்ந்து கொண்டார். வீட்டில்தான் கொஞ்சம் திட்டு விழுந்தது, ஆயிரம் ரூபாய் கொடுத்து புத்தகம் வாங்கியதற்காக என்று எழுதியிருந்தார். அவர் சேமித்து வைத்திருந்த அறுநூறு ரூபாயுடன் பெற்றோரிடமிருந்து வாங்கிய நானூறையும் சேர்த்து முன்பதிவுத் திட்டத்தில் புத்தகத்தை வாங்கினாராம்.
நீங்கள் ஜீபேயில் இருக்கிறீர்களா, ஐநூறு ரூபாய் அனுப்பி விடுகிறேன், அதை உங்கள் பெற்றோரிடம் கொடுத்து விடுங்கள் என்று பதில் எழுதினேன். ஆனால் அவர் மறுத்து விட்டார். பணம் பற்றிப் பேசி என்னை வருத்தம் கொள்ளச் செய்து விட்டதாக வேறு எழுதினார்.
இப்படி யாரேனும் மாணவர்கள் ஔரங்ஸேப் புத்தகத்தைப் படிக்க விரும்பினால் எனக்கு எழுதுங்கள். சில நண்பர்கள் மூலம் உங்களுக்கு நான் புத்தகத்தை அனுப்ப ஏற்பாடு செய்கிறேன். ஆனாலும் நீங்கள் இருநூறு ரூபாயை ஏற்றுக் கொண்டால் மீதியை என் நண்பர்கள் மூலம் ஏற்பாடு செய்யலாம். ஏனென்றால், எந்த ப் பொருளையும் முழு இலவசமாகக் கொடுத்தால் அது விளங்காது. ஆனாலும் அப்படி அனுப்பக் கூடிய நண்பர்களையும் நான் தேடத்தான் வேண்டும். இருந்தாலும் பரவாயில்லை. புத்தகம் படிக்க வேண்டும், வாங்குவதற்குக் காசு இல்லை என்ற நிலை எந்த மாணவருக்கும் இருக்கக் கூடாது என்று நினைக்கிறேன்.
charu.nivedita.india@gmail.com