நான்தான் ஔரங்ஸேப்…

முன்பதிவு செய்த “நான்தான் ஔரங்ஸேப்…”புத்தகம் கிடைக்கப்பெற்றது. வீட்டில் புத்தகத்தை பிரித்துப் பார்த்துவிட்டு எழுத்தாளரின் கையெழுத்துடன் வந்திருப்பதைக் கண்டு… அதிகப்பணம் செலுத்தி வாங்கிவிட்டு நான் அதை அவர்களிடம் மறைப்பதாக சந்தேகத்துடன் கேட்டார்கள். எனக்கே கையெழுத்து சமாச்சாரம் இப்போதுதான் தெரியும் என்று அவர்களுக்கு தெளிவுபடுத்தினேன். அடுத்ததாக….நேரடியாக எனது பெயர் குறிப்பிட்டு இருப்பதைப் பார்த்து நீங்கள் எனக்கு மிக நெருக்கமான நண்பரா என்று கேட்டார்கள். “என்னது எனது பெயரை குறிப்பிட்டிருக்கிறாரா….” அதைப் பார்த்ததும் என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை, செம குஷியாகிவிட்டது. வாட்சப்பில் ஒரு ஸ்டேடஸ்சை போட்டுவிட்டு… திரு. Charu Nivedita யார், இந்தப்புத்கத்தை எழுத எவ்வளவும் நேரம் & பணம் செலவு செய்துள்ளார். அவரின் இத்தனை வேலைப்பளுவின் இடையிலும் ஒவ்வொரு முகவரியாக வாசித்து பெயரைக் குறிப்பிட்டு எழுதியிருப்பது அவரின் அன்பையும் பொறுமையையும் காட்டுகிறது என விளக்கினேன். “நான் அவரைப் போன்ற ஒரு எழுத்தாளராக இருந்தால் இதையெல்லாம் செய்வேனா என்று தெரியாது. ஆனால் சாரு அவர்கள் செய்வார். அவரை நேரில் பார்த்து இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் ஒவ்வொரு வாசகருக்கும் மிக நெருக்கம்தான்…! அதுதான் சாரு…!” என்றேன்.

ஸ்பெஷல் எடிஷன் கெட்டி அட்டை என்பதால் சற்று தாமதம் ஆகிறது. இன்று அல்லது நாளை கிடைக்கும். கிடைத்தவுடன் என் கையெழுத்துடன் அனுப்பப்படும்.

முடிந்தவர்கள் நான்தான் ஔரங்ஸேப்… நாவலை கல்லூரி நூலகங்களில் வைக்க முயற்சிக்கவும். முதல் தடவையாக adult content இல்லாமல் எழுதியிருக்கிறேன். அதனால் தைரியமாக வைக்கலாம். யார் வேண்டுமானாலும் படிக்கலாம்.