பாண்டிச்சேரி சந்திப்பு தொடர்பாக…

சந்திப்புக்கு வருபவர்கள் புகை பிடிக்கலாம். அது ஒரு திறந்த வெளி என்பதால் புகைக்குத் தடையில்லை. ஆனால் குடித்த சிகரெட் துண்டுகளை கண்ட இடத்தில் போடக் கூடாது. மேலும், பல புகைஞர்கள் செடி வைக்கப்பட்ட தொட்டிகளில் நசுக்கிப் போடுகிறார்கள். இதுவரை நான் வந்த எல்லா சமயங்களிலும் செடித் தொட்டிகளில் சிகரெட் துண்டுகளைப் பார்த்து அதையெல்லாம் எடுத்து எடுத்து குப்பையில் போடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். உங்களையெல்லாம் யார் வளர்த்தது? அவர்களைத்தான் சந்தித்துப் பேச விரும்புகிறேன். இனிமேல் அப்படிச் செய்யாதீர்கள். செடிக்கு உயிர் உண்டு என்பதை மெக்காலே கல்வியில் நீங்கள் படித்ததில்லையா? ஒரு மனிதனை சிகரெட் துண்டினால் சுடுவதை விடவும் செடித் தொட்டியில் சிகரெட்டைப் போட்டு நசுக்குவது மோசமானது. ஏனென்றால், புகையிலையால் செடி செத்துப் போகும். இதையெல்லாம் உங்களுக்கு இதுவரை யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை என்பது எனக்கு ஆச்சரியத்தையும் வருத்தத்தையும் தருகிறது. மேலும், இதெல்லாம் சொல்லிக் கொடுத்து வருவதில்லை. சொல்லிக் கொடுத்தா கலவியில் ஈடுபடுகிறோம்? அதேபோல் இது போன்ற விஷயங்களையெல்லாம் யாரும் யாருக்கும் சொல்லித் தரக் கூடாது.

இப்படி எழுதுவதற்காக மிகவும் வருந்துகிறேன்.

என் எழுத்தின் செய்தியே, யாருக்கும் தொந்தரவு தராதீர்கள் என்பதுதானே? என்னைச் சந்திக்க வரும்போதா இப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும்?