Charu …
Of late I can feel our old Charu… சாருவின் எழுத்தில் இருக்கும் அந்தத் துள்ளல், பகடி எல்லாம் மீண்டும் பழைய வீரியத்துடன் திரும்ப வந்திருப்பது போல் இருக்கிறது. இந்த சாருவை நான் சில பல ஆண்டுகளாக மிகவும் மிஸ் பண்ணினேன். உங்கள் எழுத்தின் சிறப்பு என்னவென்றால், அது காலத்தைக் கடந்து நிற்கிறது. ஒரு வாசகர் எந்தக் காலகட்டத்தில் உங்கள் எழுத்தைப் படித்தாலும் அது அந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்டதாகவே தோன்றுகிறது. உதாரணமாக, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஸீரோ டிகிரி இப்போது எழுதியதைப் போல் தெரிகிறது. இன்னும் ஒரு ஐம்பது ஆண்டுகள் கழித்துப் படித்தாலும் அதைப் படிப்பவருக்கு சாரு அவருடைய காலத்தில் வாழ்பவராகவே தெரிவார் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. அந்த வகையில் உங்கள் எழுத்து கடந்த காலம், எதிர்காலம் இரண்டிலுமே இல்லாமல் நிகழ்காலத்திலேயே நின்று கொண்டிருக்கிறது. இது ஒரு அதிசயம்தான். உங்களைப் பற்றி எளிமையாக வர்ணிக்க வேண்டுமானால், நீங்கள் ஒரு ராக்ஷஸ மந்திரவாதி.
Its more than 13 years since I knew you …. I keep falling in love with you all over again and again and again…
A