நான்தான் ஔரங்ஸேப்… சிறப்புப் பதிப்பு

இன்னும் சில சிறப்புப் பிரதிகள் கைவசம் உள்ளன.  என்னைப் பற்றிய ஆவணப் படத்துக்கான தயாரிப்புச் செலவுக்காகத்தான் பணம் வசூலித்துக் கொண்டிருக்கிறேன்.  பூனை உணவுக்கான செலவில் ஒரு தொகையை ஏற்றுக் கொண்டிருந்த நண்பர் அதை நிறுத்திக் கொண்டு விட்டார்.  நான் யாரிடமும் தனிப்பட்ட முறையில் பணம் கேட்பதில்லை என்பதால் அதை அப்படியே விட்டு விட்டேன்.  இன்னொரு நண்பர் ஒரு சிறிய விபத்தில் மாட்டியதால் இன்னும் மூன்று மாதத்துக்கு அவரால் உதவ முடியாத நிலை.  ஆக, மாதம் இருபதாயிரம் ரூபாய் என் பயணச் செலவிலிருந்து ஓடிக்கொண்டிருக்கிறது.  எனவேதான் சிறப்புப் பிரதிகள் பற்றி மீண்டும் எழுதுகிறேன். 

சிறப்புப் பிரதிகள் தேவைப்படுவோர் எனக்கு எழுதுங்கள்.  ஒரு பிரதிக்கான நன்கொடை குறைந்த பட்சம் பத்தாயிரம் ரூபாய்.  அமெரிக்காவிலிருந்து பணம் அனுப்பிய ஒன்றிரண்டு நண்பர்கள் முகவரி தெரிவித்தால் இந்தியத் தபால் மூலம் அனுப்ப முடியும்.  இன்றுதான் விசாரித்தேன்.  துரிதத் தபால் என்றால், 2500 ரூ, சாதா பதிவுத் தபால் 2000 ரூ.  இந்தியாவுக்கு வெளியே எனக்கு அமெரிக்காவில்தான் வாசகர்கள் அதிகம்.  ஆனால் இரண்டு மூன்று நண்பர்கள்தான் இந்த சிறப்புப் பிரதித் திட்டத்தில் பணம் அனுப்பினார்கள்.  இப்போது இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பணம் அனுப்பினால் இந்தியத் தபால் மூலம் புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன். 

குறைந்த பட்ச நன்கொடை 10000 ரூ.  தபால் செலவைத் தனியாக அனுப்பி விட்டால் நல்லது.        

charu.nivedita.india@gmail.com