ஒரு சந்திப்பு

தினமும் 2000 இலிருந்து 3000 வார்த்தைகள் எழுதுகிறேன்.  இந்த அளவுக்கு என் வாழ்நாளில் எப்போதும் எழுதியதில்லை.  மழை காரணமாக வீட்டை விட்டும் வெளியே செல்ல முடியவில்லை.  அதனால், ஒரு மாற்றத்துக்காக இந்த மாதம் 19, 20, 21 (சனி, ஞாயிறு, திங்கள்) மூன்று நாளும் ஏற்காட்டில் இருப்பேன்.  18 இரவே ஏற்காடு வந்து விடுவேன். 

ஏற்காடு என்றாலே கொலைப்பசி என்ற விஷயம் பயமுறுத்துகிறது.  இந்த முறை செல்வகுமார் என்னோடு வருவதால் – அவரிடம் காரும் இருக்கிறது என்பதால் – காலையில் எழுந்ததும் அவரோடு பசியாறச் சென்று விடலாம்.  எல்லாவற்றையும் விட முக்கியம், அவர் ஒரு டீட்டோட்டலர்.  அது ஒரு பெரிய சௌகரியம்.  மதியத்துக்குக் கூட இத்தனை மணிக்கு சாப்பாடு என்று சொல்லி விட வேண்டும் என்று இருக்கிறேன்.  இனிமேல் விருந்தினர்களின் இடத்தில் கூட இவ்விஷயத்தில் சமரசம் செய்து கொள்ளாமல் கறாராக இருந்து விடலாம் என்று முடிவு பண்ணியிருக்கிறேன்.  மதியம் ஒரு மணிக்கு மதிய உணவு.  அதிலும் அசைவம்தான்.  ஏனென்றால், ஒருநாள் சாம்பார் பண்ணி விட்டார் சமையல்காரர்.  அதை என்னால் மறக்கவே முடியாது.   கேட்டதற்கு இரவுதான் அசைவம் என்றார்.  நான் இரவில் சாப்பிடுவதில்லை. இந்த முறை நல்ல திடமான மனதுடன் செல்ல இருக்கிறேன். 

யாரும் வர விரும்பினால் எனக்கு எழுதுங்கள்.  ஒன்றிரண்டு நிபந்தனைகள்தான்.  பகலில் குடிக்கக் கூடாது.  இரவில் குடித்தால் இன்னொருத்தர் சாதனத்தை எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.  அவரவர் பாட்டை அவரவரே கவனித்துக் கொள்ள வேண்டும்.  யாரும் யாரிடமும் சிகரெட் கடன் கேட்கக் கூடாது.  முக்கியமாக, அநாவசியமாகப் பேசிப் பேசி அறுக்கக் கூடாது.  

charu.nivedita.india@gmail.com