the outsider: அவசர உதவி தேவை

என்னுடைய முப்பது ஆண்டுக் கால நண்பர் இப்போது திடீரென்று ஒரு காரியம் பண்ணி விட்டார். அவருக்கு அதற்கான சூழல் என்னவென்று தெரியவில்லை. நடந்தது இதுதான்.

தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற எடிட்டர். அவ்ட்ஸைடருக்கு படத் தொகுப்பு (எடிட்டிங்) செய்து கொடுப்பதற்கு மிகவும் ஆர்வத்துடன் முன்வந்தார். என் வீட்டுக்கே வந்தார். நவம்பர் 15 கடைசி தேதி அன்று எனக்கு படம் கிடைத்து விட வேண்டும் என்றேன். ஒப்புக் கொண்டார். எளிதில் முடித்து விடலாம் என்றார். மணிக்கணக்கில் ஃபோனிலும் நேரிலும் பேசினார். சீனி எடுத்த படத்தை சுமார் பதினைந்து மணி நேரம் (இரண்டு நாட்கள்) பார்த்தார். உலகத் தரம் என்று பாராட்டினார்.

ஆனால் நவம்பர் பதினைந்திலிருந்து எடிட்டர் என் ஃபோனையே எடுக்கவில்லை. சுமார் நூறு முறையாவது அழைத்திருப்பேன். புனேயில்தான் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று மற்ற நண்பர்கள் மூலம் அறிந்தேன். இப்போது சென்னையில் இருக்கிறார். இன்னமும் ஃபோனை எடுக்கவில்லை. எடிட்டிங் வேலை பத்து சதவிகிதம் பண்ணியிருக்கிறார்.

ஆரம்பத்திலேயே (மூன்று மாதங்கள் முன்பு) என்னிடம் பணத்தையும் கேட்டு வாங்கிக் கொண்டார். இப்போது இப்படி நட்டாற்றில் விட்டு விட்டு ஓடுவார் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

இது பற்றி இதற்கு மேலும் நான் எழுத விரும்பவில்லை. இப்போது ஆக வேண்டியதைப் பார்க்க வேண்டும். இன்னொரு எடிட்டர் கிடைத்து விட்டார். அவருக்கான ஊதியம் தர வேண்டும். இசையமைப்பாளர் சத்யா என் நண்பர். அவருக்கும் ஊதியம் தர வேண்டும். என்னுடைய கையிருப்பு முழுதும் தீர்ந்து விட்டது. படத்தை நான் விஷ்ணுபுரம் வட்டத்திடம் பன்னிரண்டு தேதிக்குள்ளாவது கொடுக்க வேண்டும். தயாராகி விடும். ஆனால் பணம்தான் இப்போதைய தேவை. இது நான் சற்றும் எதிர்பாராத செலவு. உங்களால் எத்தனை முடிகிறதோ அத்தனை உதவி செய்யுங்கள். ஆனால் இந்த ஆவணப்படம் உலகத் தரம் என்பது மட்டும் உறுதி. சில காட்சிகள் கோடிக்கணக்கில் செலவு செய்தால்தான் எடுக்க முடியும். இலவசமாக அமைந்தது. அருவியில் ஒருவர் விழ இருந்தார். இன்னொருவர் பிடித்து விட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. அப்படியும் ஐந்து லட்சம் விலையுள்ள கேமரா விழுந்திருக்கும். அதையும் கேமராமேன் பிடித்து விட்டார். ஒரு கண்ணாடிதான் உடைந்தது. ஐநூறு ரூபாய்தான் செலவு. இந்த விபத்து படப்பிடிப்பின் கடைசி நாள் நடந்தது. எனக்கு ஆதவன் ஞாபகம் வந்து விட்டது.

எல்லாம் நல்ல முறையில் முடிந்தது. இப்போதைய ஒரே தேவை பணம். ஒரு லட்சத்தைத் திரட்ட வேண்டியிருக்கிறது.

RazorPay மூலம் பணம் அனுப்பலாம். அதற்கான விவரம் மேலே உள்ளது. அல்லது, என் வங்கிக் கணக்குக்கு அனுப்பலாம்.

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no. 602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai