ஒரு புகைப்படம்: ஸ்ரீராம்

ஒரு புகைப்படத்தைப் பார்த்து பத்து நாட்களாக ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். நேற்று ஜெயமோகனின் தளத்திலும் இன்று சாருவின் தளத்திலும் மீண்டும் அந்தப் புகைப்படத்தைப் பார்த்தேன். சக்திவேலுடன் சாரு இருக்கும் புகைப்படம்தான் அது. சக்திவேல் ஜெயமோகனின் வாசகர். Physically challenged. சாரு அந்தப் புகைப்படத்தில் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்.

ஒரு நாகரிகமான சமூகத்தில் இதைப் பற்றியெல்லாம் வியப்பது கூட அநாகரிகம்தான். ஆனால், சமீபத்தில் இன்னொரு புகைப்படம் பார்த்தேன். நடிகர் விஜய் தன் ரசிகர்களுக்கு விருந்திட்டு, ஒவ்வொருவருடனும் புகைப்படம் எடுத்திருக்கிறார். அதில் ஒருவர் Physically challenged. அந்த ரசிகரை, சினிமாவில் ஒரு நடிகர் நடிகையைத் தூக்குவது போல் தூக்கி விஜய் போஸ் கொடுக்கிறார். வெட்கமாக இல்லையா?

இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களும் Physically challenged நண்பர்களை சந்திக்கும்போதும், புகைப்படம் எடுத்துக் கொள்ளும் போதும், அவர்களின் கண்களில் கருணை, இரக்கம், அன்பு எல்லாம் அருவி போலக் கொட்டும். சிலர் subtle ஆக இருக்கிறேன் எனக் காட்டிக்கொண்டு, போலியாக இருப்பார்கள்.

சாருவோ ஒரு பூனை போல் indifferent – ஆக சக்திவேல் அருகில் உட்கார்ந்து இருக்கிறார். நான் நினைத்ததை உள்ளபடியே உங்களுக்குக் கடத்தினேனா என்று தெரியவில்லை. அந்தப் புகைப்படத்தில் rockstar மாதிரி அவ்வளவு உற்சாகமாக சக்திவேலுடன் அமர்ந்து போஸ் கொடுக்கிறார் சாரு.