தமிழ் சினிமாவிலும் ஹாலிவுட் சினிமாவிலும் எனக்கு ஏதேனும் சந்தேகம் எழுந்தால் நான் உடனே அழைக்கும் நண்பர், கருந்தேள் என்று அறியப்படும் ராஜேஷ் தான். நல்ல சினிமா விமர்சகராகத் தெரிய வந்து விட்டார். தினகரனில் தொடர்ந்து பல மாதங்களாக திரைக்கதை பற்றித் தொடர் எழுதி வருகிறார். ஆங்கிலம் நன்றாக எழுதத் தெரிந்தவர் என்பதால் ஆங்கிலத்தில் எழுதுங்கள், தமிழில் வேண்டாம் என்றேன். ஆனால் புத்திரர்கள் என்றாலே தகப்பன் பேச்சைக் கேட்கக் கூடாது என்ற விதிக்கு இணங்க அவர் தமிழிலேயே எழுதுகிறார். என்னுடைய பள்ளியிலிருந்து வெளியே தெரிய வந்த முதல் மாணவர் ராஜேஷ். சமீபத்தில் அவர் மீது கடும் கோபம் அடைந்திருந்தேன். முண்டாசுப்பட்டி என்ற தலைப்பில் என்னைக் கேலிச் சித்திரமாக வரையாமல் ஜெயமோகனை வரைந்து விட்டார் என்பதே என் கோபத்துக்குக் காரணம். நீங்கள் செட் ஆகவில்லை சாரு என்று அவர் சமாதானம் சொன்னாலும் எனக்கு சமாதானம் ஆகவில்லை. ஆனால் அந்தக் கேலிச் சித்திரத்தைப் பார்த்து விட்டு பல மூடர்கள் எனக்கு ஆபாசக் கடிதம் எழுதியிருந்தனர். ஒரு ஆள் அவந்திகாவையெல்லாம் ஆபாசமாகத் திட்டி எனக்குக் கடிதம் எழுதியிருந்தான். என்னைத் திட்டு, என்ன வேண்டுமானாலும் திட்டு. என் மனைவியை ஏன் திட்டுகிறாய்? ஆனால் ஒன்று. கேடு சூழ்ந்தால் மட்டுமே ஒருவன் அவந்திகாவை அண்டுவான். ஒரு ஆள் என் வீட்டு கேட்டின் முன்னே ஆட்டோவை வைத்துக் கொண்டு நின்றான். அவந்திகா ஸ்கூட்டரில் உள்ளே வர வேண்டும். ஆட்டோ ஆள் அவள் எவ்வளவு ஹாரன் அடித்தும் எடுக்கவில்லை. அவளைப் பார்த்துக் கொண்டே கைத்தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறான். இவள் ஹாரன் அடிப்பதை நிறுத்தி விட்டு நான் உள்ளே போக வேண்டும், கொஞ்சம் வண்டியை எடுங்கள் என்கிறாள். அவன் அவளை முறைத்து விட்டு வண்டியை எடுத்து, எடுத்த வேகத்தில், அவளைப் பார்த்து ஒரு ஆபாச வசையை வீசி விட்டுப் போகிறான். ”என்னம்மா சொன்னான்? என்னமோ சொன்னான்பா எனக்குப் புரியல.” சரி, என்ன சொன்னான் என்று அந்த வார்த்தைகளை மட்டும் சொல் என்றேன். பத்துப் பதினைந்து முறை கேட்டதும் தயக்கத்துடன் என் அருகில் வந்து, “உன் மூஞ்சியில் என் பூளை வைக்க என்றான்” என்றாள். அவன் வெகு சீக்கிரம் விபத்தில் மாட்டிச் சாவான் என்றேன். ஐயோ, இனிமேல் உன்னிடம் எதுவுமே சொல்ல மாட்டேன் என்றாள். கொஞ்ச நேரத்தில் – மூன்று நிமிடம் ஆகியிருக்கும் – தெருமுனையில் குப்பை லாரியில் ஆட்டோ மோதி அந்த ஆளுக்குக் கை கால் உடைந்து விட்டது. அவன் அசிங்கமாகத் திட்டியதால் அவனுக்கே ஏற்பட்ட பதற்றத்தில் வேகமாகப் போய் மோதி விட்டான். அவந்திகாவை நிந்தித்து ஆபாசக் கடிதம் எழுதும் போக்கிரிகளுக்கும் அவ்வாறே ஆகும். இது சாபம் அல்ல. இயற்கை விதி. மேஜையின் மீது தண்ணீரை ஊற்றினால் அது ஆகாயம் போகாது. தரையில்தான் விழும்.
நகைச்சுவை உணர்வு அற்றுப் போன மூடர்கள் நிரம்பிய தேசத்தில் வாழ்வது எனக்குப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. ஒரு கேலிச் சித்திரத்தைக் கூட ரசிக்கத் தெரியாத மடையர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேனே என்று ரொம்பவும் வருத்தமடைந்த நாட்கள் அவை. வூடி ஆலனை அவருடைய ரசிகர்கள் ஆயிரம் விதமாகக் கேலிச் சித்திரம் வரைந்திருக்கின்றனர் என்பதெல்லாம் இந்த மூடர்களுக்கு எங்கே தெரியப் போகிறது? மனநோய் மருத்துவமனையில் எல்லா நோயாளிகளுக்கும் ஒரு மடிக் கணினியைக் கொடுத்தால் என்ன ஆகும்? அதன் விளைவைத்தான் எழுத்தாளர்களாக நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
ராஜேஷின் கட்டுரை இங்கே:
http://karundhel.com/2014/06/tamil-cinema-villains-1980-to-2000.html
Comments are closed.