தமிழில் எழுத்தாளனாக வாழ்வது பற்றிய சுயபுலம்பல் கட்டுரைகள் பலவற்றை நான் எழுதியிருக்கிறேன். ஆனால் இந்திய ஆங்கில எழுத்துச் சூழல் இன்னொரு வகையில் பயங்கரமானது. அதில் உள்ள ஒரே ஆறுதல் 30 லடசம், 50 லட்சம் என்று ஏதாவது ஒரு பரிசைத் தூக்கிக் கொடுத்து விடுவார்கள். இப்படி கிழக்கு ஆசியாவிலேயே ஒரு 50 பரிசுகள் உள்ளன. இதில் ஏதாவது ஒரு பரிசை வாங்காத இந்திய ஆங்கில எழுத்தாளரே இல்லை எனலாம்.
நான் சமீபத்தில் எழுதிய முன் மன்னிப்பு என்ற கட்டுரை பற்றி வந்த ஒரு கடிதத்தை இங்கே பதிவிடுகிறேன். அனுப்பியவர் பெயர் வேண்டாம். அதில் குறிப்பிடப்பட்டுள்ள டிஷானி தோஷி என்னையும் பேட்டி எடுத்து எக்ஸ்பிரஸ் நாளிதழில் போட்டிருக்கிறார். எனக்கும் நன்கு தெரிந்தவர் தான். இருந்தாலும் இலக்கியம் என்று வரும் போது நான் கறாரானவன். சல்மான் ருஷ்டி மாதிரி அசடு வழிய மாட்டேன். டிஷானியின் சராசரி நாவலுக்கு சல்மான் செம ரகளையான பாராட்டுப் பத்திரம் வழங்கியிருக்கிறார். என் நண்பர் ஆலன் ஸீலி குறிப்பிட்டது உண்மைதான். நீங்கள் ஒரு அழகான, இளமையான பெண்ணாக இருந்து ஆங்கிலத்திலும் எழுதினால் ஆங்கில நாளிதழ்களில் ஒரு பக்கத்துக்கு செய்தி வெளியிடுவார்கள். எதற்கு? நீங்கள் நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டதற்காக அல்ல. ஒரு நாவல் எழுதுவது பற்றி யோசிக்க ஆரம்பித்தற்காக. தமிழில் சினிமாக்காரர்களுக்குக் கொடுக்கப்படும் மரியாதையை ஆங்கில ஊடகங்கள் அழகான, இளம் (ஆங்கில) பெண் எழுத்தாளர்களுக்குக் கொடுக்கிறது. சென்ற ஆண்டு கூட தி ஹிண்டுவின் ஆங்கில நாளிதழில் ஒரு அழகான, இளம் ஆங்கிலப் பெண் எழுத்தாளரின் புகைப்படமும் பேட்டியும் ஒரு முழுப்பக்கம் வந்திருந்தது. கடவுளை தினந்தோறும் சபிக்கிறேன். ஏண்டா என்னை ஆணாகப் படைத்தாய் என்று. பெண்ணாகப் படைத்திருந்தால் இந்நேரம் என் 50 பக்க நாவலுக்கு ஒபாமாவிடமும் ரஜினிகாந்த்திடமும் ஷாருக் கானிடமும் முன்னுரை வாங்கியிருப்பேன். (ஜெயமோகன் திட்டினால் என்ன, போய்யா… அந்த ஆள் ஒரு ஆணாதிக்கவாதி) இனி கடிதம்…
Dear Charu,
Comments are closed.