சாருவின் முன்ணுணர்வு: அ. ராமசாமி

சாரு நிவேதாவின் முன்னுணர்வு ஆச்சரியம் ஊட்டக்கூடியதாக இருக்கிறது. ஏப்ரல் 5 ஆம் தேதி கனடாவிலிருந்து எழுதும் தமிழ் எழுத்தாளரான அ.முத்துலிங்கம் தனது முகநூல் பக்கத்தில் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து செயல்படும் அர்மோரி ஸ்கொயர் விருதுக்குழுவின் அறிவிப்பொன்றின் இணைப்பைத் தந்திருந்தார்.  அதில் தென்னாசிய மொழிகளிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட நூல்களுக்கான விருது அறிவிப்பின் குறும்பட்டியல் இருந்தது. அப்பட்டியல் இடம்பெற்றுள்ள 7 நூல்களில் அவரது நூலோடு சாருவின் நூலும் இடம் பெற்றிருந்தது.  அப்பதிவை வாசித்தவுடன் சாருவின் வலைப்பக்கம் சென்று பார்த்தேன். அப்படியொன்றைப் பற்றிய குறிப்பே இல்லை. அடுத்தடுத்த நாட்களிலும் எதுவும் எழுதவே இல்லை. ஆனால் மூன்று நாட்களுக்கு முன்னால் இனவாதம் என்ற கட்டுரையை எழுதியுள்ளார். அவரது ராசலீலாவின் மொழிபெயர்ப்பு விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்டுத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், பின்னர் ஏதோவொரு சிக்கலால் மாற்றம் செய்யப்பட்டுவிட்டதாகவும் எழுதியுள்ளார். எப்போதும் அவரது எழுத்தைப்பற்றி வதந்தி பரப்பும் சிலரின் முயற்சியால் இது நடந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். அதனாலேயே தனது பக்கத்தில் அதைப்பற்றி எழுதவில்லை என்று தெரிவித்திருந்தார்.
 

ஒரு சர்வதேச விருதுக்குழுவின் நடவடிக்கையே இப்படி இருக்கிறது என்பது ஆச்சரியமளிக்கிறது. தமிழ் எழுத்தாளர் ஒருவருக்குக் கிடைக்க இருந்த விருதைக் கெடுத்தவர்கள் கண்டிக்கப்படவேண்டியவர்கள். அவர்களின் கருத்தைக் கேட்டுத் தனது முடிவை மாற்றிக்கொண்ட  அர்மோரி ஸ்கொயர் விருதுக்குழுவின் செயல் கடும் கண்டனத்துக்குரியது.  

பின்குறிப்பு—————– 

இப்பதிவுக்கான இணைப்புகள் பின்னூட்டத்தில்.

2023 Prize Announcement — Armory Square Ventures (armorysv.com)