the most funniest and craziest thing of all the seven worlds…

ஆர்மரி ஸ்கொயரில் என் ராஸ லீலாவைத் திட்டி ஒரு முழத்துக்கு எழுதியிருக்கிறார்கள் இல்லையா, இந்த ஆர்மரி ஸ்கொயர்காரர்கள் தேர்ந்தெடுக்கும் நூலை ஓப்பன் லெட்டெர் புக்ஸ் என்ற பதிப்பகத்தில்தான் வெளியிடப் போகிறார்கள். இந்த ஓப்பன் லெட்டர் புக்ஸின் தலைவர் பெயர் Chad W. Post. இவர்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு ரோச்சஸ்டர் பல்கலைக்கழகத்தில் ஸீரோ டிகிரி நாவலை பாடமாகச் சேர்த்தவர். ஸீரோ டிகிரியில் எவ்வளவு செக்ஸ் இருக்கும் என்பது யாவருக்கும் தெரியும். இதே Chad W Post ஸீரோ டிகிரி பற்றி என்ன எழுதியிருக்கிறார் என்று இந்தப் பதிவில் வாசியுங்கள்.

https://web.archive.org/web/20180430040243/http://www.rochester.edu/College/translation/threepercent/index.php?id=1412

மேற்கண்ட லிங்கில் I என்று வருவது திரு Chad W Post.

அதாவது, இலக்கியக் கொலை செய்யும் ஆர்மரி ஸ்கொயர் நடுவர்கள் சிறந்த நூல் என்று தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் நூலை சாத் டபிள்யூ போஸ்ட் தான் தன் ஓப்பன் லெட்டர் புக்ஸில் வெளியிடப் போகிறார். அவரோ என் வாசகர். என் ஸீரோ டிகிரியை தான் பணிபுரியும் பல்கலைக்கழகத்தில் பாடமாக வைத்து ஸீரோ டிகிரியைப் பற்றிப் புகழ்ந்து எழுதியிருப்பவர்.

அட மட்டிகளா!