அதிச்சி பற்றி இன்னொரு தகவல் இப்போது வந்தது. அதிச்சியின் ஒரு நூல் உயிர்மையில் மொழிபெயர்க்கப்பட்டு வந்துள்ளது.
ஆனால் நம் தமிழ் எழுத்தாளர்களின் ஒரு நூலாவது நைஜீரியாவில் கிடைக்கிறதா? அத்தனை தென்னமெரிக்க எழுத்தாளர்களையும் ஐரோப்பிய எழுத்தாளர்களையும் நாம் தமிழில் மொழிபெயர்த்துப் படிக்கிறோம். நம்முடைய ஒரு எழுத்தாளரை அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ படிக்கிறார்களா? அவர்களுக்குத் தெரிந்த “இந்திய” எழுத்தாளர்கள் சல்மான் ருஷ்டியும் அருந்ததி ராயும்தான். இருவருமே ஆங்கிலத்தில் எழுதும் சராசரி எழுத்தாளர்கள்.
நம்மை அமெரிக்கரும் ஐரோப்பியரும் எப்போது படிப்பார்கள் என்பதே விருது குறித்த என் கவலைக்கெல்லாம் அடிப்படைக் காரணம்.