நான் இலங்கைக்கு வந்ததிலிருந்தே என்னை நக்கல் பண்ணிக் கொண்டிருக்கிறார் என்னை இலங்கைக்கு வரவழைத்த றியாஸ் குரானா. நேற்று அவர் என்னைச் சந்தித்தபோது எனக்கு உயிராபத்து இல்லை. இன்றுதான் வந்தது. அதுவும் றியாஸின் நண்பர் அனுப்பிய வாய்ஸ் மெஸேஜ். அவருக்கும் உயிராபத்து. மிகவும் நடுக்கத்துடனும் பதற்றத்துடனும் அவர் எனக்கு அந்த வாய்ஸ் மெஸேஜை அனுப்பியிருந்தார். அதைப் பார்த்து விட்டுத்தான் இங்கேயிருந்து தப்பி விடலாம் என்று முடிவு செய்தேன். இங்கே அனாதையாக செத்தால் என்ன செய்வது என்று எழுதியிருந்தேன் அல்லவா? அதற்கும் றியாஸ் என்னிடம் ஃபோனில் செத்தால் இங்கேயும் தமிழ்நாட்டைப் போல் விழா எடுப்போம் கவலைப்படாதீர்கள் என்று சொன்னார். எத்தனை வக்கிரம். இப்போது நான் உயிராபத்து என்று சொல்வது பரபரப்பு கிளப்புவதற்காகவாம். ‘தன் கூடவே சலசலப்பும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர். எனவே சாரு கூறுவதைப் பார்த்து யாரும் அச்சம் அடைய வேண்டாம் ‘ என்று என்னை அவமதிக்கிறார் றியாஸ். ஏன் என்னைக் கொன்று போட்ட பிறகு மாலை போட்டு விழா எடுத்து பெயர் பண்ணப் பார்க்கிறீர்களா? உயிராபத்தே உங்கள் நண்பரின் அபயக் குரல் மெஸேஜ் கேட்டுத்தான் ஐயா!!!! பிறகு எப்படி நான் உங்களிடம் உதவி கேட்பது? மேலும் நாள் பூராவும் என்னை நக்கல் அடித்து போஸ்ட் எழுதிக் கொண்டிருப்பவரிடம் எப்படி நான் உதவி கேட்க?