இசையும் உன் எழுத்தும் வேறல்ல

இக்கணத்தில் சிறைப்படுத்திய எண்ணம்.

எந்த ஒரு மதுவின் போதையும், எப்பேர்ப்பட்ட கலவியின் பரவசமும் Adajio for strings இல் மூழ்கி இருக்கும் மயக்கத்திற்கு ஈடு இல்லை .
மற்றவை கொண்டாட்டம். ஆனால் Adajio for strings மெய்நிலை மறந்த பிரபஞ்ச சமர்ப்பணம்.
எத்தனை மணி நேரம் மூழ்கித் திளைத்தேன் என்ற கணக்கே இல்லை .
சில நிமிடங்களில் மனதின் அத்தனை உணர்வெல்லைகளுக்குள்ளும் புகுந்து பயணிக்கிறது. சில சமயம் மீள சாத்தியம் இல்லாத படுகுழி போல் தெரிகிறது.
இருளில் மூழ்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் என் வெறுமையை விரட்டியதில் எழுத்தை விட இசைக்கு பங்கு அதிகம் என்று நினைத்ததுண்டு. இப்பொழுதுதான் உறைத்தது, இரண்டும் என்னுள் நிகழ்த்தியது ஒன்றுதான் என்று.

இசையும் உன் எழுத்தும் வேறல்ல சாரு.

***

கடிதம் எழுதியவர்களின் அனுமதி இல்லாமல் பெயர் வெளியிடுவதில்லை. அதிலும் பெண் என்றால் ரொம்பவும் கவனம். கடிதம் எழுதிய தோழியிடம் பெயர் வெளியிடலாம எனக் கேட்டிருக்கிறேன். பொதுவாகவே நான் ஃபோன் செய்தி அனுப்பினால் 24 மணி நேரம் கழித்து பதில் அனுப்புவதுதான் நண்பர்களின் வழக்கம். ஸ்ரீராம் மட்டுமே விதிவிலக்கு. இத்தனைக்கும் அவர் மருத்துவர். சீனி ஒரு ஒரு மணி நேரத்தில் பதில் அனுப்பி விடுவார். அல்லது, அழைத்து விடுவார். மற்றவர்கள் 24 மணி நேரம். அதிலும் இலங்கை நண்பர்கள் 48 மணி நேரம்.

பெயர் வெளியிட அனுமதி கிடைத்தால் வெளியிடுகிறேன்.

இசையும் என் எழுத்தும் ஏன் வேறல்ல என்று எனக்குத் தோன்றுகிறது என்றால், காலையிலிருந்து Ludovico Einaudiயையே கேட்டபடி எழுதிக் கொண்டிருக்கிறேன். அதிபரவச நிலை இது. கேளுங்கள்.

(6) Best Songs of Ludovico Einaudi Ludovico Einaudi Greatest Hits Full Album 2021(HQ) – YouTube