இப்போது நான் எழுதப் போகும் விஷயத்தைப் பற்றி இன்னும் சில நாட்களில் விரிவாகவே எழுத இருக்கிறேன்.
நான் கடந்த மூன்று மாதங்களாக மிகக் கடுமையான மலச்சிக்கலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். மலச்சிக்கல் என்றால் நான்கு தினங்கள் கூட மலம் வெளியேறாமல், சாப்பிட முடியாமல் பெரும் அவதி. அதோடேயேதான் ஸ்ரீலங்காவும் சென்று வந்தேன். ஆச்சரியத்துக்குரிய வகையில் ஆயுர்வேத மருந்தும் காப்பாற்றவில்லை. அப்படிப்பட்ட நிலையில்தான் ஒருநாள் ஃபேஸ்புக்கில் சித்த மருத்துவர் பாஸ்கரன் பற்றித் தற்செயலாக அறிந்தேன். அது ஒரு வியாழக்கிழமை. பாஸ்கரன் வேலூரில் இருக்கிறார். ஆனால் ஒவ்வொரு வியாழக்கிழமையும் சென்னை வருகிறார் என்று தெரிந்தது ஃபேஸ்புக் குறிப்பில். மருத்துவர் பாஸ்கரனால் குணம் பெற்ற யாரோ ஒரு புண்ணியவான் பாஸ்கரனின் தொலைபேசி எண்ணையும் கொடுத்திருந்தார். நான் பார்த்தபோது மாலை ஐந்து மணி இருக்கும். சரி, எதற்கும் முயற்சிக்கலாம் அந்த எண்ணுக்கு அழைத்தேன். மருத்துவர் பாஸ்கரனே எடுத்தார். இப்போதே வாருங்கள் என்றார்.
இத்தனை சிநேகபூர்வமான மருத்துவர்கள் ஒருசிலரைத்தான் பார்த்திருக்கிறேன்.
மேற்கு மாம்பலம். உடனே போனேன். நாடி பிடித்துப் பார்த்தார். என் உடலின் வரலாற்றையே சொல்லி விட்டார். வேலூர் திரும்பியதும் மருந்து அனுப்புகிறேன் என்றார். மிக எளிதாகக் குணப்படுத்தி விடலாம் என்றார்.
மருந்தும் வந்தது. சாப்பிட்டேன். நம்புங்கள். மேஜிக் மாதிரி மலச்சிக்கல் நின்று விட்டது. மூன்று மாத அவஸ்தை ஒரே நாளில் நின்றது. காரணம், சித்த வைத்தியத்தை நம் மூதாதையர் அந்த அளவுக்கு ஆய்வு செய்து நமக்குக் கொடுத்திருக்கிறார்கள். அதை மருத்துவர் பாஸ்கரனைப் போன்ற சிலர் நமக்கு அளிப்பதற்குத் தயாராக இருக்கிறார்கள். நாம்தான் அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளாமல் அவஸ்தைப் படுகிறோம். நாளை மேற்கு மாம்பலத்தில் அவரைச் சந்தியுங்கள்.
சித்த மருத்துவம் பெரும்பாலும் எல்லா நோய்களையுமே குணப்படுத்தக் கூடியது. அதன் அடிப்படை என்னவென்றால், நோய்களின் காரணத்தை அறிந்து அதைத் தீர்த்து வைப்பது. ஆரம்ப நிலைப் புற்றுநோய், சர்க்கரை, தோல் வியாதி, இதய நோய் போன்ற இன்றைய காலகட்டத்தின் சவாலாக விளங்கும் நோய்களையும் சித்தத்தின் மூலம் தீர்க்கலாம். எக்ஸைல் நாவலில் விரிவாக எழுதியிருக்கிறேன். மருத்துவர் பாஸ்கரன் இளைஞர். மிகவும் சிநேகபூர்வமானவர். மிக இனிமையாகப் பேசக் கூடியவர். பதினென் சித்தர்களின் மரபில் வந்தவர். நவீன முறையிலும் படித்துப் பட்டம் வாங்கியவர்.
இன்னொரு முக்கியமான விஷயம். நம் பாரம்பரிய வைத்திய முறைகளை ஐந்து ஆண்டுகளில் கற்றுக் கொள்வது சாத்தியம் இல்லை. பத்து வயதிலிருந்தே தொடங்கி இருபது ஆண்டுகள் ஒரு குருவுடன் தங்கிக் கற்றுக் கொள்ள வேண்டியது. பாஸ்கரனின் மூதாதையர் அனைவருமே பரம்பரை பரம்பரையாக சித்த மருத்துவர்கள். அதனால்தான் பாஸ்கரனுக்கு நாடியில் கை வைத்ததுமே நோயாளியின் சரீர ஜாதகம் தெரிந்து விடுகிறது.
சித்த மருத்துவர் பாஸ்கரனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நாளை அவர் சென்னை வருவதற்கான குறிப்பு கீழே:
வேலூர் புற்று மகரிஷி சித்த வைத்திய சாலை முதன்மை மருத்துவரும் அரசு இம்காப்ஸ் இயக்குநருமான நமது சித்த மருத்துவர் .ட.பாஸ்கரன் அவர்கள் , நாளை வியாழக்கிழமையன்று கீழ்க்கண்ட புதிய முகவரியில் பிற்பகல் சுமார் 05.00 மணி முதல் 06 .00மணி வரை இருப்பார் என்பதை தெரிவித்து கொள்கிறோம். சித்த மருத்துவர் பாஸ்கரன் அவர்களை சந்திக்க விரும்புபவர்கள் இம்முகவரி மேற்கு மாம்பலம் ஆர்யகவுடா சாலைக்கும்( அயோத்தியா மண்டபம்) அசோக்நகர் ஜவகர் வித்யாலயா பள்ளிக்கும் இடையிலும் அருகிலும் உள்ளது. இட அடையாளம் காட்டும் கூகுள் வரைபடம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. புதிய முகவரி:
19A , பாரதி தெரு, மேற்கு மாம்பலம், சென்னை -600033. கைபேசி எண்: 6379698464