சித்த மருத்துவம்

அகத்திய முனியால் அறிமுகப்படுத்தப்பட்ட சித்த மருத்துவம் பன்னெடுங்காலமாக இங்கே மக்களின் பிணி தீர்க்கும் பணியைச் செய்து வருகிறது. ஆனால் ஆங்கிலேயரின் வருகைக்குப் பிறகு சித்த மருத்துவத்தின் புகழ் மங்கி விட்டதை நாம் அறிவோம். இழப்பு நமக்குத்தானே தவிர அந்த மருத்துவ முறைக்கு அல்ல. அதே சமயம் நான் அலோபதி மருத்துவ முறையை எதிர்ப்பவன் அல்ல. எனக்கு ஹார்ட் அட்டாக் வந்த போது என் உயிரைக் காப்பாற்றியது அலோபதி முறைதான். ஆனால் சித்த மருத்துவத்தின் பெருமை என்னவென்றால், ஹார்ட் அட்டாக்கே வராமல் ஆக்குவதுதான். உதாரணமாக, சர்க்கரை வியாதி என்று எடுத்துக் கொண்டால் அதைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்குத்தான் அலோபதி முறை உதவுகிறதே தவிர சர்க்கரை வியாதியே வராமல் தடுக்க அலோபதியில் வழி இல்லை. சித்த மருத்துவத்தில் சர்க்கரையைக் குறைக்கவும் வழி உண்டு. சர்க்கரை வியாதியே வராமல் தடுக்கவும் வழி உண்டு.

சித்த மருத்துவர் பாஸ்கரன் பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அவர் தன்னிடம் மருத்துவம் பார்க்க வருபவர்களின் வசதி கருதி இனிமேல் வியாழக்கிழமைக்குப் பதிலாக ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையில் இருப்பார். விவரம் கீழே கொடுத்திருக்கிறேன். நாளை அவரை சந்திக்கலாம் என்று இருக்கிறேன். பன்னிரண்டாயிரம் அடி உயரத்தைத் தாண்டினால் மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகிறது. தென்னமெரிக்காவில் பல ஊர்கள் பன்னிரண்டாயிரம் அடி உயரத்துக்கும் மேலே இருப்பதால் எல்லா ஊர்களுக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரையும் தூக்கிக் கொண்டே போக இயலவில்லை. (அதற்காக சின்ன சைஸ் சிலிண்டர்கள் இருந்தாலும் அது சிரமம்தான்.) அதனால் மருத்துவர் பாஸ்கரனிடம் இயற்கையான பிராணவாயுக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி வேண்டுகோள் விடுக்கலாம் என்று இருக்கிறேன்.

பாஸ்கரனைப் பற்றி யோசிக்கும்போது இவர் மருத்துவரா, மந்திரவாதியா என்று வியந்திருக்கிறேன். இவரைப் பற்றி எழுதியிருக்கும் நண்பரும் அதேபோல் ஆச்சரியப்பட்டதாகச் சொல்கிறார். அவருடைய தாயாரின் நாள்பட்ட சர்க்கரை வியாதியைத் தீர்த்து விட்டதாக எழுதியிருக்கிறார். இவ்வளவு ஏன் எழுதுகிறேன் என்றால், நான் பார்க்கும் பல இளைஞர்கள் இன்று உடம்பு சரியில்லை என்றே எப்போதும் புலம்புகிறார்கள். ஒருத்தர் தூக்கமே வரவில்லை என்கிறார். ஒருத்தர் எப்போது பார்த்தாலும் ஜுரம் என்கிறார். மாதம் ஒருமுறை ஜுரம். இவர்கள் அனைவரும் இளைஞர்கள். நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களைப் பார்த்தால் ஏதோ மரண தேவனிடம் கிளம்பி விட்டது போல் பீதியுடன் வாழ்கிறார்கள். ஹல்வா சாப்பிடுங்களேன் என்றால் ஏதோ விஷம் போல் பார்க்கிறார்கள். என்னய்யா இது, ஹல்வா எப்போது விஷம் ஆயிற்று? முறுக்கு சாப்பிடுங்கள் என்றால் ஐயோ எண்ணெய் இருக்கும், கொலஸ்ட்ரால் என்கிறார்கள். ஆப்பம் தேங்காய்ப் பால் என்றால் ஐயோ தேங்காயில் கொலஸ்ட்ரால் என்கிறார்கள். 98 வயது கிழவன் மாதிரி எல்லாவற்றுக்கும் பயம். இவர்கள் அத்தனை பேரும் நாட வேண்டியது அகத்திய மாமுனியை. அகத்தியர் இப்போது இல்லை. நம்மிடையே வாழும் சித்த மருத்துவர்களின் ரூபத்தில் வாழ்கிறார் அகத்தியர். அவர்களின் ஒருவர் பாஸ்கரன்.

இப்போது என்று இல்லை, என்னுடைய எக்ஸைல் நாவலிலேயே தேரையர் என்ற சித்தர் பற்றி எழுதியிருக்கிறேன். அப்போதெல்லாம் ஆன்மீகம், மருத்துவம், யோகம், இலக்கியம் எல்லாம் ஒரே துறை சார்ந்ததாக இருந்தது.

மருத்துவர் பாஸ்கரனால் பயன்பெற்ற நண்பர் ஒருவர் எழுதிய பதிவை கீழே தருகிறேன். அதிலேயே மருத்துவரை எப்படி சந்திப்பது என்ற விவரம் அடங்கியிருக்கிறது.

”மருத்துவர் பாஸ்கரன் வியாழக்கிழமைகளில் சென்னை வருவதால் அவரைச் சந்திக்க எங்கள் அலுவலகப் பணிகள் இடம் கொடுப்பதில்லை. விடுப்பு எடுத்துக் கொண்டு அவரைச் சந்திக்கச் சென்றால் ஒரு நாள் ஊதியம் கட். என்ன செய்வது..” என நண்பர்கள் பலரும் வருத்தம் தெரிவித்திருந்தார்கள். அதனை மருத்துவரிடம் எடுத்துச் சொன்னேன்.
“இனி ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னைக்கு வருகிறேன்” என நல்ல சேதி சொல்லிவிட்டார் மருத்துவர் பாஸ்கரன். 
வரும் ஞாயிறு (02.07.2023) முதல் இனி ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மருத்துவரை சென்னையில் சந்தித்து ஆலோசனை பெறலாம். காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை கீழ்க்கண்ட முகவரியில் சந்திக்கலாம். குணமடையலாம். 
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பை க்ளிக் செய்து, வரும் Google Form-ஐ பூர்த்தி செய்து அனுப்பி உங்களுக்கான ஆலோசனை நேரத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். Google Form விண்ணப்பத்திற்கு: https://forms.gle/ewdHK6YvJf2aFB9bA

முகவரி: 19A , பாரதி தெரு, மேற்கு மாம்பலம், சென்னை – 600 033. இம்முகவரி மேற்கு மாம்பலம் ஆர்யகவுடா சாலைக்கும் அசோக்நகர் ஜவகர் வித்யாலயா பள்ளிக்கும் இடையிலும் அருகிலும் உள்ளது.

Google Maps Location: https://rb.gy/ikkkm
மேலும் தொடர்புக்கு: +91 63796 98464

மருத்துவர் பாஸ்கரன் குறித்து நண்பர் எழுதியுள்ள விரிவான பதிவுக்கு: https://shorturl.at/bxDE1