நாடகத்தின் அங்கம் 2 காட்சி 2இல் வரும் Charlemagne என்ற பெயரில் “r” என்ற எழுத்து விடுபட்டிருக்கிறது. அதேபோல் அந்தப் பெயரின் சரியான உச்சரிப்பு ஷார்ல்மான்ய. சார்லிமேன் அல்ல. ஏதோ ஒரு வேகத்தில் இதை கவனிக்காமல் விட்டுவிட்டேன். உச்சரிப்பு விஷயத்தில் இப்படி நடந்ததே இல்லை.
ஆனால் St Patrickஇன் பெயரை ஐரிஷ்காரர்கள் பேட்ரிக் என்றும் ஃப்ரெஞ்சுக்காரர்கள் பாத்ரிக் என்றும்தான் உச்சரிப்பார்கள். அதனால்தான் நாடகத்தில் வரும் ஐரிஷ் பாதிரிகள் பேட்ரிக் என்றும் ஆர்த்தோ பாத்ரிக் என்றும் பேசுகிறார்கள். அதனால் அது எழுத்துப் பிழை அல்ல என்று கொள்ளவும். இதையெல்லாம் இந்த நாடகத்தை இயக்குபவர்கள் கவனமாகச் செய்ய வேண்டும்.